Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 32)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்
மூலம்– ப்ரபத்திக்காக ஒன்றும்அநுஷ்டிக்க வேண்டாவாகிலும் ஸ்வதந்த்ராதிகாரத்தாலே கிங்கரனான இவனுக்கு ஸ்வாமியினுடைய ஆஜ்ஞாதிலங்கனம் ஆகாது என்று ஸமர்த்தித்தார்கள். ஆஜ்ஞாவிரோதிபி: ஸ்வார்ஹ ப்ராயச்சித்த: பராங்முகை: ஸ்வாதிகாரோசித: ஸர்வை: ப்ரத்யவாயோ துரத்யய: ஆஜ்ஞாநுபாலநே தத்தத் ப்ரத்யவாய நிவாரணம் ஸ்வாபிஸந்தோஷத: ப்ரீதி: இதி லாபத்வயம் ஸ்திரம் அநிச்சாதோ நிவர்த்ததே ஸ்வர்காத்யம் கர்மணாம் பலம் அமர்யாதஸ்ய துர்வார: ப்ரத்யவாய: அந்யஹேதுக:
– ப்ரபத்தியின் பொருட்டு நித்ய நைமித்திக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டியதில்லை என்றாலும், அவை ஒருவன் ஸ்வதந்த்ரமானவன் அல்லன் என்பதால் அவனுக்கு விதிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றை அவன் இயற்றாமல் இருத்தல் என்பது எஜமானனாகிய ஸர்வேச்வரனுடைய ஆணைகளை மீறுதல் என்றே ஆகும் என பூர்வர்கள் உரைத்தனர். ஆஜ்ஞாவிரோதிபி: ஸ்வார்ஹ ப்ராயச்சித்த: பராங்முகை: ஸ்வாதிகாரோசித: ஸர்வை: ப்ரத்யவாயோ துரத்யய: - ஸர்வேச்வரனுடைய ஆணைகளை மீறி நடப்பவர்களும், தங்களுடைய அதிகாரங்களுக்கு ஏற்ப பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று எண்ணாதவர்களும் தங்களுடைய விதி மீறல்களுக்குரிய விளைவுகளைக் கடக்க இயலாது. ஆஜ்ஞாநுபாலநே தத்தத் ப்ரத்யவாய நிவாரணம் ஸ்வாபிஸந்தோஷத: ப்ரீதி: இதி லாபத்வயம் ஸ்திரம் – ஸர்வேச்வரனுடைய ஆணைகளுக்குட்பட்டு நடப்பதால் அந்தக் கட்டளைகளைச் செய்யாமல் விடுவதால் உண்டாகக்கூடிய தோஷங்களைத் தவிர்த்தல், ஸர்வேச்வரனுடைய ப்ரீதி காரணமாகத் தனக்கு உண்டாகவல்ல மகிழ்ச்சி ஆகிய இரண்டு நன்மைகளும் ஸ்திரமாக இருக்கும். அநிச்சாதோ நிவர்த்ததே ஸ்வர்காத்யம் கர்மணாம் பலம் அமர்யாதஸ்ய துர்வார: ப்ரத்யவாய: அந்யஹேதுக: - வர்ணாச்ரம கர்மங்களுக்குப் பலனாக ஏற்படவல்ல ஸ்வர்க்கம் முதலான பலன்கள், ப்ரபந்நன் ஒருவன் அவற்றில் ஆசையில்லாமல் செய்வதால், இவனுக்கு ஏற்படுவதில்லை. ஆனால் சாஸ்த்ரங்களில் உள்ளவற்றை ஒருவன் மீறி நடந்தால், அந்தக் காரணத்தினாலேயே அவனுக்கு தோஷங்கள் உண்டாகும்.