Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 27)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

தாமஸ, ராஜஸ, ஸாத்விக த்யாகங்கள்

மூலம் - குடும்ப பரணாதிகளுக்கு அலைந்து ஸந்ந்யாஸாதிகளைப் பற்றுவாரைப் போலே துக்கரூபைகளான ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்குச் சோம்பிவிடுகிறவிடம் ராஜஸ த்யாகமென்னுமிடத்தை துக்கமித்யேவ ய: கர்ம காயக்லேச பயாத்த்யஜேத் ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத் என்று அருளிச்செய்தான்.

– தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற மிகவும் கடினப்பட்டு, அது இயலாமல் போகவே, ஸந்யாஸம் கைக்கொள்பவர்கள் போன்று, கர்மங்களைச் செய்யும்போது ஏற்படக்கூடிய சரீர உபாதைகளுக்கும் அஞ்சி, சோம்பல் காரணமாக அவற்றைக் கைவிடுதல் ராஜஸ த்யாகம் ஆகும். இதனைப் பகவான் கீதையில் (18-8) - துக்கமித்யேவ ய: கர்ம காயக்லேச பயாத்த்யஜேத் ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத் – செய்யவேண்டிய கர்மத்தை, அது உடலை வருத்துமோ என்று எண்ணி, அச்சம் காரணமாகக் கைவிடுபவன், ராஜஸ த்யாகம் எனப்படும் அத்தகைய கைவிடுதல் மூலம் எந்தப் பலனையும் அடைவதில்லை – என்றான்.