Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 26)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

தாமஸ, ராஜஸ, ஸாத்விக த்யாகங்கள்

மூலம்– தேவ தைவிக சாஸ்த்ரங்களிற் சொல்லுகிற நியமங்களை பாஹ்யரும் குத்ருஷ்டிகளும் ப்ராந்தியாலே விடுகிறவிடம் தாமஸ த்யாகமென்னுமிடத்தை நியதஸ்ய து ஸந்யாஸ: கர்மணோ நோபபத்யதே மோஹாத்தஸ்ய பரித்யாக: தாமஸ: பரிகீர்த்தித: என்கிற ச்லோகத்தாலே அருளிச்செய்தான்.

– வேதங்களிலும் தர்மசாஸ்த்ரங்களிலும் கூறப்பட்ட பல விதிமுறைகளை நாஸ்திகர்களும், ஒரு சில ஆஸ்திகர்களும் தங்களுடைய விபரீதமான ஞானம் காரணமாக விடுதல் என்பது தாமஸ த்யாகம் ஆகும். இதனைப் பகவான் கீதையில் (18-7) - நியதஸ்ய து ஸந்யாஸ: கர்மணோ நோபபத்யதே மோஹாத்தஸ்ய பரித்யாக: தாமஸ: பரிகீர்த்தித: - வர்ணங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் உண்டான கர்மங்களை யாரும் விடுதல் கூடாது; அறியாமை காரணமாக அவற்றைக் கைவிடுதல் என்பது தாமஸ த்யாகம் ஆகும் – என்றான்.