Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 25)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

பரமைகாந்திகளும் சாஸ்த்ரங்களை மீறுதல் கூடாது

மூலம்– மஹாப்ரபாவனான பரமைகாந்தி பக்கலிலும் இச்சாஸ்த்ரீய நியமம் குலையாதென்னுமிடம் நாதமுநிகள், ஆளவந்தார், எம்பெருமானாருள்ளிட்ட பரமாசார்யர்களுடைய அந்திமதிவஸாவதியான அநுஷ்டானங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்வது.

– மிகவும் சிறந்த ப்ரபாவங்களுடன் கூடிய பரமைகாந்திகளும் கூட சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட விதிகளை மீறுதல் கூடாது. இதனை நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானார் முதலான உயர்ந்த ஆசார்யர்கள், தங்களுடைய அந்திமகாலம் முடிய, தங்களுடைய அனுஷ்டானங்களைக் கைவிடாமல் இருந்தனர் என்பதன் மூலம் தெளிவாக அறியலாம்.