Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 24)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்
மூலம் – “தத்ஸ்ப்ருஷ்டமகிலம் சுசி” என்றது ஆதுர விஷயத்தில் ஸ்ப்ருஷ்ட்வா ஸ்நாநம் போலவும் தீக்ஷாகாலத்தில் விஷ்ணுஹஸ்தப்ரதாநாக்யஸ்பர்சம் போலவும் திருப்ப்ரதிஷ்டையில் மஹாபாகவத ஸ்பர்சம் போலவும், மற்றும் ஸ்பர்சம் விஹிதமான இடங்களிலே இவனுடைய ஸ்பர்சம் பெற்றதாகில் ஸ்ப்ருஷ்டமானவையெல்லாம் பரிசுத்தமாமென்றபடி அல்லது உதும்பரம் ந ஸாதேத்து காலிங்கோதும்பராலாபு பிம்பாநி பரிவர்ஜயேத் தாந்யச்நதஸ்து ஸததம் நித்யம் தூரதரோ ஹரி: வ்ருந்தாக கதகாலிங்க பில்வோதும்பரபி: ஸடா: யோ பக்ஷயதி ஸம்மோஹாத்தஸ்ய தூரதரோ ஹரி: காலிங்கீம் க்ஷுத்ரவார்த்தாகம் தக்தாந்நம் மௌஸலீம் ததா தும்பிகாபல மச்நீயாத்தஸ்ய தூரதரோ ஹரி: யோத்தி வார்த்தாக காலிங்கம் மஸூர விஸகாந்யபி அந்தகாலே ஜகந்நாதம் கோவிந்தம் ந ஸ்மரிஷ்யதி தும்பம் கோசாதகம் சைவ பலண்டும் க்ருஞ்ஜனம் ததா சத்ராகம் விட்வராஹம் ச புக்த்வா சாந்த்ராயணம் சரேத் நாளிகா சண சத்ராக குஸும்பாலாபு விட்பவாந் கும்பீ கஞ்சுகவ்ருந்தாக கோவிதாராம்ச்ச வர்ஜயேத் க்ஷீரம் லவண ஸம்மிச்ரம் உச்சிஷ்டேபி ச யத்க்ருதம் பாநம் ரஜகதீர்த்தே ச ஸுராபாநஸமம் விது: ஆரநாளம் ந ஸேவேத கதாசித்பகவத்பர: ஸுராகல்பம் ஹி தத்ஞேயம் தஸ்மாத்யத்நேந வர்ஜயேத் ப்ரமாதாதபி கீலாலம் ய: ஸ்ப்ருசேத்வைஷ்ணவோ நர: உபசார சதேநாபி ந க்ஷமாமி வஸுந்தரே ஏகாதச்யாம் ஸுரச்ரேஷ்ட யோ புங்க்தே த்விஜஜந்மவாந் ப்ரதிக்ராஸமயம் புங்க்தே கில்பிஷம் ச்வாநவிட்ஸமம் ஏகாதச்யாம் து யோ புங்க்தே சக்தஸ்ஸந்நிரூபத்ரவ: ஸுராபாநஸமம் பாபம் பவேத்தஸ்ய ந ஸம்சய: மத்யாபாநாத் ஸுரச்ரேஷ்ட பாதைவ நரகம் வ்ரஜேத் ஏகாதச்யந்நகாமஸ்து பித்ருபிஸ்சஹ மஜ்ஜதி அந்நதோஷாதசமநாத் நாநாவிஷயதர்சநாத் தேஹசௌசாதி விரஹாத் ஸமலம் ஜாயதே மந: ஆலஸ்யாதந்நதோஷாச்ச ம்ருத்யுர்விப்ராந் ஜிகாம்ஸதி இத்யாதிகளாலே நிஷித்தமானவையெல்லாம் இவன் தொட்டவாறே சுத்தமாம் என்றபடியன்று. இப்படி விஷய வ்யவஸ்தை பண்ணாதபோது பரிக்ருஹீததமங்களான பஹுசாஸ்த்ரங்களோடும் சிஷ்டாநுஷ்டாநத்தோடும் விரோதிக்கையாலே அதிவாதமாத்ரமாய் விடும்.
தத்ஸ்ப்ருஷ்டமகிலம் சுசி – அவன் எதனைத் தொடுகிறானோ அவை தூய்மை அடைகின்றன – என்ற வாக்கியத்தை, நோயாளி ஒருவன் நீராடுவதற்குப் பதிலாக அவனைத் தொட்டு ஒருவன் அவன் சார்பாக நீராடலாம்; தீக்ஷை கொடுக்கும் காலத்தில் ஆசார்யன் சிஷ்யனைத் தொடுதல் என்பது மஹாவிஷ்ணுவின் திருக்கரத்தால் தொடுதலுக்குச் சமம்; புதிதாக ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹத்தை பாகவதன் ஒருவன் தொடுவது உயர்ந்தது முதலான வாக்கியங்களில் உள்ள பொருளில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டபடி இவனுடைய தொடுதல் என்பது தூய்மைப்படுத்தவல்லது என்று கருத்து. இதனை ஏற்காவிட்டால், கீழே உள்ள பல வாக்கியங்களில் காணப்படும் தவிர்க்கப்படவேண்டிய பலவையும் இவனது தொடுதலால் தூய்மை அடையும் என்றாகிவிடும்: மஹாபாரதம் - உதும்பரம் ந ஸாதேத்து – அத்திக்காயை உண்ணக்கூடாது காலிங்கோதும்பராலாபு பிம்பாநி பரிவர்ஜயேத் தாந்யச்நதஸ்து ஸததம் நித்யம் தூரதரோ ஹரி: வ்ருந்தாக கதகாலிங்க பில்வோதும்பரபி: ஸடா: யோ பக்ஷயதி ஸம்மோஹாத்தஸ்ய தூரதரோ ஹரி: காலிங்கீம் க்ஷுத்ரவார்த்தாகம் தக்தாந்நம் மௌஸலீம் ததா தும்பிகாபல மச்நீயாத்தஸ்ய தூரதரோ ஹரி: யோத்தி வார்த்தாக காலிங்கம் மஸூர விஸகாந்யபி அந்தகாலே ஜகந்நாதம் கோவிந்தம் ந ஸ்மரிஷ்யதி – அத்திக்காய், சுரைக்காய், கோவைப்பழம் முதலானவற்றை உண்ணக்கூடாது; இவற்றை உண்பவனிடமிருந்து ஸ்ரீஹரி தூரத்திலேயே இருப்பான். வெண்கத்திரிக்காய், தேத்தாங்கொட்டை, குவளை, அத்திக்காய், காந்தல் ஆகியவற்றை யார் ஒருவன் உண்கிறானோ அவனிடமிருந்து ஸ்ரீஹரி தூரத்திலேயே உள்ளான். சிற்றவரை, காந்தல், சுரைக்காய் உண்ணக்கூடாது; இவற்றை உண்பவனிடமிருந்து ஸ்ரீஹரி தூரத்திலேயே இருப்பான். வெண்கத்திரி, கன்று போட்ட 10 நாட்களுக்குள்ளான பசுவின் பாலால் உண்டான தயிர், தாமரைக்கிழங்கு ஆகியவற்றை உண்பவன் தன்னுடைய மரணகாலத்தில் ஜகந்நாதனை எண்ணமாட்டான். தும்பம் கோசாதகம் சைவ பலண்டும் க்ருஞ்ஜனம் ததா சத்ராகம் விட்வராஹம் ச புக்த்வா சாந்த்ராயணம் சரேத் – பீர்க்கங்காய், ஈருள்ளி, வெள்ளுள்ளி, நாய்க்குடை ஆகியவற்றை உண்பவன் சாந்த்ராயணம் என்னும் விரதத்தைச் செய்யவேண்டும். நாளிகா சண சத்ராக குஸும்பாலாபு விட்பவாந் கும்பீ கஞ்சுகவ்ருந்தாக கோவிதாராம்ச்ச வர்ஜயேத் க்ஷீரம் லவண ஸம்மிச்ரம் உச்சிஷ்டேபி ச யத்க்ருதம் பாநம் ரஜகதீர்த்தே ச ஸுராபாநஸமம் விது: - தேங்காய்முளை, நாய்க்குடை, குசும்பை, சுரைக்காய், மலத்தை எருவாக இட்டு அதன் மூலம் விளைந்தவை, உப்பு இட்ட பால், எச்சிலில் உண்டாக்கிய நெய், வண்ணான்துறை நீர் ஆகியவற்றை உட்கொள்ளுவது கள்ளுக்குச் சமம். ஆரநாளம் ந ஸேவேத கதாசித்பகவத்பர: ஸுராகல்பம் ஹி தத்ஞேயம் தஸ்மாத்யத்நேந வர்ஜயேத் – பகவத் பக்தி கொண்ட ஒருவன் காடியை எப்போதும் உண்ணக்கூடாது. அது கள்ளுக்குச் சமம் என்பதால் அதனைத் தள்ளவேண்டும். ப்ரமாதாதபி கீலாலம் ய: ஸ்ப்ருசேத்வைஷ்ணவோ நர: உபசார சதேநாபி ந க்ஷமாமி வஸுந்தரே – பூமாதேவியே! எந்த விஷ்ணுபக்தன் ரத்தத்தைத் தான் அறியாமல் தொட நேர்ந்தாலும், அந்தத் தோஷத்தை நான் நூறு உபசாரம் செய்தாலும் பொறுக்கமாட்டேன். ஏகாதச்யாம் ஸுரச்ரேஷ்ட யோ புங்க்தே த்விஜஜந்மவாந் ப்ரதிக்ராஸமயம் புங்க்தே கில்பிஷம் ச்வாநவிட்ஸமம் – அந்தணன் ஒருவன் ஏகாதசியில் அன்னத்தை உண்டால், அவன் ஒவ்வொரு களபத்திலும் பாவத்தையே உண்கிறான். அவன் உணவு நாயின் மலத்துக்குச் சமம் ஆகும். ஏகாதச்யாம் து யோ புங்க்தே சக்தஸ்ஸந்நிரூபத்ரவ: ஸுராபாநஸமம் பாபம் பவேத்தஸ்ய ந ஸம்சய: மத்யாபாநாத் ஸுரச்ரேஷ்ட பாதைவ நரகம் வ்ரஜேத் ஏகாதச்யந்நகாமஸ்து பித்ருபிஸ்சஹ மஜ்ஜதி – யார் ஒருவன் சக்தியோடு கூடியவனாக உள்ளபோதிலும், ஏகாதசியில் உண்கிறானோ, அவனுக்குக் கள் உண்ட பாவன் ஏற்படும். இதில் ஐயமில்லை. கள் குடித்தவன் தான் மட்டும் நரகம் செல்வான்; ஏகாதசியில் அன்னத்தை உண்பவன் தனது பித்ருக்களையும் நரகம் கொண்டு செல்வான். அந்நதோஷாதசமநாத் நாநாவிஷயதர்சநாத் தேஹசௌசாதி விரஹாத் ஸமலம் ஜாயதே மந: - தோஷத்துடன் கூடிய உணவை உண்பதாலும், வைராக்யம் இல்லாததாலும், பலவிதமான விஷயங்களைக் காண்பதாலும், சரீரசுத்தி இல்லாமையாலும் மனம் தோஷம் கொண்டதாக ஆகிறது. ஆலஸ்யாதந்நதோஷாச்ச ம்ருத்யுர்விப்ராந் ஜிகாம்ஸதி – வேத அத்யயனம் செய்யாமலும், சோம்பலாலும், ஆஹாரத்தில் உள்ள தோஷத்தாலும் அந்தணர்களைக் கொல்ல எண்ணுகிறான். மேலே உள்ள பல வரிகளால், விலக்கப்பட்டவை என்றாலும் இவன் தொட்டால் அவை தூய்மை அடையாது என்று உணரலாம். இப்படியாக ஆராயாமல் உள்ளபோது, அவை பலவிதமான சாஸ்த்ரங்களோடும், அவற்றைக் கடைபிடிக்கின்ற விதிமுறைகளோடும் முரண்பாடாகிவிடும்.