Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 23)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்

மூலம் - “ததுக்திமாத்ரம் மந்த்ராக்ரயம்” என்றது இவன் தஞ்சமாக உபதேசித்த பாஷாவாக்யங்களும் திருமந்த்ரம்போலே ஆதரித்து அநுஸந்திக்க வேணுமென்றபடி; அல்லது இவன் சொல்லும் லௌகிக வ்யவஹாரங்கள் ஜபாதியோஜ்யங்கள் என்றபடியன்று “சொல்லும் அவிடு கருதியாம்” என்றதுக்கும் இப்படி ஹிதார்த்தமான வாக்யமே விஷயம்.

ததுக்திமாத்ரம் மந்த்ராக்ரயம் – அவன் கூறுவது மந்த்ரம் போன்றதே ஆகும் – என்பதன் பொருள் என்னவென்றால், அவன் சாதாரண வாக்கியங்களை உச்சரித்தால் கூட, அவற்றை திருமந்த்ரம் போன்று எண்ணிக் கொண்டு பின்பற்றவேண்டும் என்பதாகும். அல்லது, அவன் கூறுவதை ஜபம் போன்று கொள்ளாமல், ஞானஸாரத்தில் (40) - சொல்லும் அவிடு கருதியாம் – அவன் கூறும் பரிஹாஸ வார்த்தைகளும் வேதம் போன்று ஆகும் – என்றும் கொள்ளலாம்.