Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 21)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்
மூலம் - “ததுச்சிஷ்டம் ஸுபாவநம்” என்றதுவும் புநருபநயநாதி ப்ரகரணங்களிலே பாவநமாக சாஸ்த்ரப்ராப்தமான உச்சிஷ்ட விசேஷத்துக்கு இக்குணவிசேஷமடியாகப் பாவநத்வாதிசயம் சொன்னபடி. மற்றும் சிஷ்ய புத்ராதிகளுக்கு நாராயணைக நிஷ்டத்வம் உண்டானால் ஆசார்யாதிகளுக்கும் அவர்களுடைய உச்சிஷ்டம் ஸுபாவநமென்றபடி அன்று.
ததுச்சிஷ்டம் ஸுபாவநம் – அவன் உண்ட மீதம் தூய்மைப்படுத்தவல்லது – என்ற வரியின் மூலம், உபநயனம் முதலான ப்ரகரணங்களில் எத்தகைய உணவு தூய்மைப்படுத்தவல்லதோ, அது மட்டுமே கூறப்படுவதாகக் கொள்ளவேண்டும். சிஷ்யர்களோ அல்லது புத்ரர்களோ நாராயணனைக் குறித்து ஆழ்ந்த நிஷ்டையில் உள்ளபோதும், அவர்களது மிஞ்சிய உணவு என்பது ஆசார்யர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இவ்விதம் செய்யவல்லது என்பதை இங்கு கூறவில்லை.