Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 18)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்

மூலம் – யோ யோ ஜல்ப: ஸ ஸ ஜப: என்றதுவும், பாருஷ்யமதிவாதச்ச பைசுநம் சைவ ஸர்வச: அஸம்பத்த ப்ரலாபச்ச வாங்மயம் ஸ்யாச்சதுர்விதம் என்று சாஸ்த்ரப்ரதிஷித்தமான வ்ருதா ஜல்பத்தைச் சொன்னபடியன்று. தத்த்வ ஹித விஷயமாக சிஷ்ய குரு ஸப்ரஹ்மசாரி சிஷ்ட ச்ரேயோர்த்திகளோடே அஜ்ஞாத ஜ்ஞாபநார்த்தமாகவும், ஜ்ஞாத ஸ்திரீகணார்த்தமாகவும் ஸம்சய நிராகரணார்த்தமாகவும் பண்ணும் உக்திப்ரத்யுக்தி பரம்பரைகளைச் சொல்லுகிறது. ந விக்ருஹ்ய கதாம் குர்யாத் என்று ஸாமாந்யேந சொல்லச் செய்தேயும் யதாசக்தி நிக்ருண்ஹீயாத் தேவதா குரு நிந்தகாந் என்று விசேஷித்து தர்மசாஸ்த்ரஸித்தமாகையாலே பாஹ்ய குத்ருஷ்டிகளைப் பற்ற விஜிகீஷுவாகச் சொல்லும் வாக்யபரம்பரையை ஜல்பம் என்றதாகவுமாம்.

யோ யோ ஜல்ப: ஸ ஸ ஜப: - அவன் எதனைக் கூறுகிறானோ அதுவே ஜபம் என்ற வாக்கியம் மூலம், மநு ஸ்ம்ருதி (12-6) - பாருஷ்யமதிவாதச்ச பைசுநம் சைவ ஸர்வச: அஸம்பத்த ப்ரலாபச்ச வாங்மயம் ஸ்யாச்சதுர்விதம் – கடுமையாகப் பேசுதல், உள்ளது உள்ளபடி உரைக்காமல் மிகைப்படுத்துதல், கோள் உரைத்தல், பொருத்தம் இல்லாமல் உரைத்தல் என்று வாக்கு விஷயத்தில் நான்கு பாவங்கள் உள்ளன – என்று கூறுவதற்கு ஏற்ப, சாஸ்த்ர விரோதமாக கூறப்பட்ட விஷயங்களை உரைத்தால் ஜபம் என்று கொள்ளமுடியாது. அந்த வரியில் கூறப்பட்ட “பேசுதல்” என்பது எதுவென்றால் உண்மை மற்றும் நன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு மனிதன் தன்னுடைய சிஷ்யர்கள், ஆசார்யன், சகமனிதர்கள், பண்டிதர்கள் ஆகியவர்களிடம் அவர்களுக்கு தெரிந்ததை அறியவும், சந்தேகத்தை நீக்கவும் செய்யும் சொற்களே ஆகும். மாறாக அந்த வரியில் உள்ள “ஜல்ப” என்னும் பதமானது, வாதம் செய்யும்போது ப்ரயோகிக்கின்ற சொற்கள் என்றும் கொள்ளலாம்; மநுஸ்ம்ருதியில் (4-72) - ந விக்ருஹ்ய கதாம் குர்யாத் - உண்மையை அறிந்து கொள்ள முயலாமல் சண்டை இடுவதற்காக வீண்வாதம் செய்யக்கூடாது – என்று கூறியபோதிலும், யதாசக்தி நிக்ருண்ஹீயாத் தேவதா குரு நிந்தகாந் – தெய்வத்தையும் ஆசார்யர்களையும் நிந்திப்பவர்களைக் கண்டிக்கவேண்டும் – என்றது காண்க. ஆக இது போன்றவர்களை வாதத்தில் வெல்ல விரும்பும் ஒருவன் கூறும் சொற்களை “ஜல்ப” என்னும் பதம் மூலம் உரைத்ததாகக் கொள்ளலாம்.