Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 16)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்
மூலம் – இவன் ப்ரபாவத்தைப் பற்ற நாராயணைக நிஷ்டஸ்ய யா யா வ்ருத்திஸ்ததர்சநம் யோ யோ ஜல்பஸ்ய ஸ ஜப: தத்த்யாநம் யந்நிரீக்ஷணம் தத்பாதாம்ப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம் ததுக்திமாத்ரம் மந்த்ராக்ராஹ்யம் தத்ஸ்ப்ருஷ்டமகிலம் சுசி என்கிற ச்லோகங்கள் ப்ரமாணமேயாகிலும், இங்கு “யா யா வ்ருத்திஸ்ததர்சநம்” என்றது சாஸ்த்ரவிருத்த வ்ருத்தியைச் சொன்னபடியன்று. தேச காலாதி வைகுண்யத்தாலே ஆபத்ஸ்வநந்தராவ்ருத்தி: என்கிற நிலையிலே நின்றாலும் அது ஸமாராதநோபயுக்தமான ஸம்யகுபாதநமாம் என்றபடி.
– இப்படிப்பட்ட பாகவதர்களின் ப்ரபாவத்தை விஹஹேந்த்ர ஸம்ஹிதை - நாராயணைக நிஷ்டஸ்ய யா யா வ்ருத்திஸ்ததர்சநம்யோ யோ ஜல்பஸ்ய ஸ ஜப: தத்த்யாநம் யந்நிரீக்ஷணம்தத்பாதாம்ப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்ததுக்திமாத்ரம் மந்த்ராக்ராஹ்யம் தத்ஸ்ப்ருஷ்டமகிலம் சுசி – நாராயணன் ஒருவனை மட்டுமே எப்போதும் எண்ணியபடி உள்ளவனுக்கு எந்தெந்த கர்மங்கள் உண்டோ, அவை அனைத்தும் பகவத் ஆராதனையே ஆகும்; அவன் பேசும் அனைத்தும் ஜபமே ஆகும்; அவன் பார்க்கும் அனைத்தும் பகவத் த்யானமே ஆகும்; அவனுடைய கால்களில் பட்ட நீரானது தூய்மையான தீர்த்தம் ஆகும்; அவன் உண்ட பின்னர் மீதம் உள்ள உணவு தூய்மையானது ஆகும்; அவனுடைய பேச்சு அனைத்தும் மந்த்ரம்; அவன் தொடுவது அனைத்தும் தூய்மை ஆகிறது – என்றது காண்க. ஆனால் இங்கு “யா யா வ்ருத்திஸ்ததர்சநம் - எந்தெந்த கர்மங்கள் உண்டோ, அவை அனைத்தும் பகவத் ஆராதனை” என்று கூறப்பட்டபோதிலும், இங்கு சாஸ்த்ரங்களால் தடுக்கப்பட்ட கர்மங்களைக் கூறவில்லை என்று அறியவேண்டும். ஒருவன் இடம், காலம் போன்ற சூழ்நிலை காரணமாகத் தன்னால் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் போக நேர்ந்தாலும், தனக்கு விதிக்கப்படாமல், தன்னைக் காட்டிலும் தாழ்ந்தவற்றுக்கு விதிக்கப்பட்டதைச் செய்தால் தோஷம் ஏதும் இல்லை.