Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 13)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

ஜாதி எல்லைகளுக்கான ப்ரமாணங்கள்

மூலம் – பகவத்கீதாதிகளிலும் ஸ்த்ரியோ வைச்யாஸ்ததா சூத்ரா: தே அபி யாந்தி பராம் கதிம் ஸ்வே ஸ்வே கர்மண்யமிரத: ஸம்ஸித்திம் லபதே நர: ஸ்வகர்மநிரதஸ்ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ: தஸ்மாத் ஸப்ரணவம் சூத்ரோ மந்நாமாநி ந கீர்த்தயேத் வர்ணாச்ரமாசாரவதா புருஷேண பர: புமாந் விஷ்ணுராராத்யதே பந்தா நாந்யஸ்தத்தோஷ காரக: ந சலித நிஜவர்ண தர்மதோ ய: இத்யாதிகளாலே பாகவதனுக்கே யதாபூர்வம் ஜாதி வ்யவஸ்தையும், அதுக்கு அநுரூபமான வ்ருத்த வ்யவஸ்தையும் ஸுஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டது. இப்படி பாகவதத்வமாகிற குணமும் அதடியாக வரும் புருஷார்த்த விசேஷமும் ஸமாநமாயிருக்க, ஜாதி விசேஷங்களும் வ்ருத்திவிசேஷங்களும் நித்ய வ்யவஸ்திதங்கள் என்னுமிடம் சூத்ர: ஸாது: கலி: ஸாது: இத்யாதிகளிலும் ப்ரஸித்தம்.

– கீழே உள்ள பல வரிகள் காண்க: கீதை (9-32) - ஸ்த்ரியோ வைச்யாஸ்ததா சூத்ரா: தே அபி யாந்தி பராம் கதிம் – பாவம் செய்தவர்களின் வயிற்றில் பிறந்த பெண்கள், வைச்யர்கள், சூத்ரர்கள் போன்றவர்களில் யார் என்னை வந்து அடைகிறார்களோ அவர்கள் உயர்ந்த கதியைப் பெறுகிறார்கள். கீதை (18-45) - ஸ்வே ஸ்வே கர்மண்யமிரத: ஸம்ஸித்திம் லபதே நர: ஸ்வகர்மநிரதஸ்ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு – தன்னுடைய கர்மங்களில் ப்ரீதி கொள்ளும் மனிதன், தான் அடையவேண்டிய புருஷார்த்தங்களை அடைகிறான். கீதை (18-46) - ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ: - தனது கர்மம் மூலம் பகவானை ஆராதனை செய்து ஸித்தி அடைகிறான். மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (118-14) - தஸ்மாத் ஸப்ரணவம் சூத்ரோ மந்நாமாநி ந கீர்த்தயேத் – சூத்ரன் என்னுடைய திருநாமத்தை ப்ரணவத்துடன் சேர்த்து உரைக்கலாகாது. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (3-8-9) - வர்ணாச்ரமாசாரவதா புருஷேண பர: புமாந் விஷ்ணுராராத்யதே பந்தா நாந்யஸ்தத்தோஷ காரக: - ஜாதி மற்றும் ஆச்ரமம் ஆகியவற்றுக்கு உண்டான ஆதாரத்தைக் கொண்டு பரமபுருஷன் ஆராதிக்கப்படுகிறான்; இதனைக் காட்டிலும் அவனுக்கு வேறு எதுவும் மகிழ்ச்சி அளிப்பதில்லை. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (3-7-20) - ந சலித நிஜவர்ண தர்மதோ ய: - யார் தன்னுடைய ஜாதிக்கு உரிய கர்மங்களை விடாமல் உள்ளானோ அவனே உண்மையான விஷ்ணுபக்தன். மேலே உள்ள பல வரிகள் மூலமாக ஒருவன் பாகவதனாக உள்ளபோதிலும் அந்தந்த ஜாதி மற்றும் ஆச்ரமத்துக்கான விதிகள் தெளிவாகவே கூறப்பட்டன. மேலும் பாகவதனுக்கு உரிய இருப்பும், அதற்கான பலனாகிய மோக்ஷமும் அனைத்து ஜாதிக்கும் பொதுவாக உள்ளபோதிலும், அந்தந்த ஜாதி மற்றும் ஆச்ரமத்திற்கான விதிகள் தனியாக உண்டு என்று கருத்து. இதனை ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-2-6) - சூத்ர: ஸாது: கலி: ஸாது: - சூத்ரன் நல்லவன், கலியுகம் நல்லது – என்பதால் அறியலாம்.