Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 12)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

வித்யைகளை அறிவதில் உள்ள வரையறை

மூலம் – பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம் என்றதுவும் கந்யாப்ரதாநாதிபரமன்று, ஞானப்ரதாநாதிபரம் என்று வ்யாக்யானம் பண்ணினார்கள். பூஜ்ய: என்கிற சப்தமும் ஸாதாரணமாகையாலே “பாகவதத்வ முண்டானால் ஸர்வரும் சாஸ்த்ரம் சொன்ன மட்டுக்களிலே ஆதரணீயர்; இவர்களை ஸஜாதீயரோடு ஒக்க நினைத்து அவஜ்ஞை பண்ணினபோது நரகமாம்” என்று இவ்வளவிலே தாத்பர்யம். இவ்வர்த்தத்தை ய:சூத்ரம் பகவத்பக்தம் என்று தொடங்கி மஹர்ஷி ஸங்க்ரஹித்தான். ஆகையால் ஜாதி வ்யவஸ்தை குலையாதே நிற்க பாகவத ப்ரபாவம் கண்டு கொள்வது. அதோ ஜதேநிர்க்ருஷ்டாயா: ஸர்வஸ்யா வா விநாசத: ஸாஜாத்யம் விஷ்ணுபக்தாநாம் இதி மந்தமிதம் வச: வைஷ்ணவத்வேந மாந்யத்வம் ஸமாநம் முநிஸம்மதம் ஜாத்யாதி த்வம்ஸதஸ்ஸாம்யம் பக்திகாலே பவிஷ்யதி

– ஆகவே “விஷ்ணுவின் பக்தர்கள்” என்னும் காரணத்தால் தாழ்ந்த ஜாதி என்பது கழிவதாலும், அனைத்து ஜாதி என்பது நீங்குவதாலும், அனைவரும் ஒரே போன்று ஜாதி உள்ளவர்கள் என்று அறிவது மந்தபுத்தி ஆகும். வைஷ்ணவத்வேந மாந்யத்வம் ஸமாநம் முநிஸம்மதம் ஜாத்யாதி த்வம்ஸதஸ்ஸாம்யம் பக்திகாலே பவிஷ்யதி – வைஷ்ணவர்களாக உள்ளதால் அனைவராலும் கொண்டாடத்தக்கவர்கள் என்னும் நிலை பொதுவானது என்பதை ரிஷிகளும் ஏற்கிறார்கள்; ஆனால் ஜாதி முதலியவை கழிந்து, மற்றவர்களுடன் ஒத்த நிலை என்பது மோக்ஷகாலத்தில் மட்டுமே உண்டாவதாகும்.

– கருடபுராணம் - பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம் – யார் ஒருவனுக்கு என் மீது எட்டுவிதமான பக்தி உள்ளதோ அவன் மிலேச்சனாக உள்ளபோதிலும் ஞானம் மற்றும் பக்தி கொண்ட உயர்ந்த அந்தணன் என்றும், ஸந்ந்யாஸி என்றும், பண்டிதன் என்றும் கொள்ளத்தக்கவன் – என்ற வரியின் மூலம், இப்படிப்பட்டவனுக்கு பெண்ணைக் கொடுத்து ஸம்பந்தம் செய்துகொள்ளலாம் என்று கூறப்படவில்லை; மாறாக அவனுடன் ஞானம் குறித்த ஸம்பந்தம் மட்டுமே கொள்ளலாம் என்பதே உணர்த்தப்பட்டது என்று பூர்வர்கள் வ்யாக்யானம் செய்துள்ளனர். “பூஜ்ய – வணங்கத்தக்கவன்” என்னும் பதமானது பொதுவான ஒன்றாகும்; இதன் மூலம் ஸர்வேச்வரனிடம் பக்தி கொண்ட ஒருவனை மதிக்கவேண்டும் என்பதும், ஆனால் சாஸ்த்ரங்களால் வரையறை செய்யப்பட்ட அளவு மட்டுமே மதிக்கவேண்டும் என்பதும் உணரப்படவேண்டும். இப்படிப்பட்டவர்களைத் தங்களுடைய குலத்திற்கு ஒத்தவர்கள் என்று நடத்தினால், நரகம் கிட்டும் என்பதை அறியவேண்டும். இதனை இதிஹாஸ ஸமுச்சயம் (25-26) - ய:சூத்ரம் பகவத்பக்தம் – பகவத் பக்தனாக உள்ள சூத்ரனையோ, வேடனையோ, நாய் மாமிசம் உண்பவனையோ தங்களுடைய ஜாதிக்கு சமமாக எண்ணுபவர்கள் நரகம் புகுவர் – என்று சுருக்கமாக உரைத்தமை காண்க. ஆகவே பாகவதன் ஒருவனின் ப்ரபாவம் குறித்து அறியும்போதும் சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட எல்லைகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதோ ஜதேநிர்க்ருஷ்டாயா: ஸர்வஸ்யா வா விநாசத: ஸாஜாத்யம் விஷ்ணுபக்தாநாம் இதி மந்தமிதம் வச: