Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 10)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

ஆழ்வார்களும் தங்களுடைய ஜாதியின் வரம்பை மீறாமல் இருந்தமை

மூலம் – விதுராதிகளிலும் உத்க்ருஷ்ட ப்ரபாவரான ஆழ்வார்களுடைய வ்ருத்தாந்த விசேஷங்களை நாம் அநுஷ்டாநத்துக்கு த்ருஷ்டாந்தமாக்கலாகாது. அவர்கள் வ்ருத்தாந்தங்களையும் ஆராய்ந்தால் ஸ்வஜாதி நியமத்தைக் கடந்தமையில்லை.

– விதுரரைக் காட்டிலும் உயர்ந்தவர்களான ஆழ்வார்களின் சரிதங்களைக் கொண்டு, அவற்றை நமது விஷயங்களுக்கு உதாரணம் காட்டக்கூடாது. ஆழ்வார்களின் சரிதங்களை ஆராய்ந்தால், அவர்கள் யாரும் தங்களுடைய ஜாதிக்கான வரம்பை மீறவில்லை என்று அறியலாம்.