Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 9)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

விச்வாமித்ரருக்கு வேறு ஜாதி வந்தமைக்கு சமாதானம்

மூலம் – மோஹநசாஸ்த்ரங்களில் சொன்ன ஜாத்யுத்தராதிகளை ப்ரமாணிகர் நினைக்கலாகாது. சரு வ்யத்யாஸாதிகளான சில விசேஷ நிதாநங்களாலே வருகிற விச்வாமித்ராதிகளுடைய நிலை வேறு சிலருக்குக் கூடுமென்கை வசநவிருத்தம்.

– தகுந்த சாஸ்த்ரங்களை மட்டுமே ப்ரமாணமாகக் கொள்பவர்கள், மயங்கவைக்கும் சாஸ்த்ரங்களில் கூறப்பட்டதை ப்ரமாணங்களாகக் கொள்ளக்கூடாது. அந்தணர் ஒருவருக்கான உணவை விச்வாமித்ரரின் தாய் உட்கொண்ட காரணத்தினால் விச்வாமித்திரர் பிறந்தார்; அவர் க்ஷத்ரியராக உள்ளபோதிலும், இந்தக் காரணத்தினால் அந்தணரே ஆகிறார். ஆகவே இவருடைய நிகழ்வைக் கொண்டு மற்றவர்களுக்கும் இதனை விதிக்கக்கூடாது.