Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 7)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

விதுரர் குறித்த ஐயங்களுக்கு விளக்கம்

மூலம் – ஸ்ரீவிதுரரும் ஸ்வஜாத்யநுரூபமாக விவாஹாதிகள்பண்ணினார்கள். பக்தவத்ஸு த்விஜாக்ரயேஷு நிஷண்ண: பரமாஸநே விதுராந்நாநி புபுஜே சுசீநி குணவந்தி ச என்று இதனைக் கேட்டுத் துர்யோதநன் பீஷ்மத்ரோணாவதிக்ரம்ய மாம் சைவ மதுஸூதந கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷள போஜநம் என்று கேட்க, த்விஷதந்நம் ந போக்தவ்யம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா: என்று உத்தரம் அருளிச்செய்கையாலே ஸ்ரீவிதுரருக்குத் துர்யோதநன் சொன்ன ஜாதி விசேஷத்தை பகவான் இசைந்தானாயிற்று. ஆனால், ப்ராஹ்மணர்க்கும் க்ஷத்ரியர்க்கும் சூத்ரனுடைய பக்வாநத்தை புஜிக்கை நிஷித்தமன்றோ என்னில், ஆர்யாதிஷ்டிதா சூத்ரா அந்நஸம்ஸ்கர்த்தாரஸ்ஸ்யு: என்று ஆபஸ்தம்பாதிகள் சொல்லுகிறபடியே யுகாந்தரங்களில் ஆர்யபரதந்த்ரரான அவ்விடத்தில் நிஷேதமில்லை. இது சுசிஸ்து ப்ரயதோ பூத்வா விதுரோந்நமுபஹாரத் என்று ஸ்ரீவிதுரருடைய குணவிசேஷங்கள் சொல்லுகையாலே ஸூசிதம்.

– விதுரர் தன்னுடைய ஜாதிக்கு ஏற்றபடியே திருமணம் செய்துகொண்டார். மஹாபாரதம் உத்யோகபர்வம் (76-45) - பக்தவத்ஸு த்விஜாக்ரயேஷு நிஷண்ண: பரமாஸநே விதுராந்நாநி புபுஜே சுசீநி குணவந்தி ச – அந்தணர்களின் உயர்ந்தவர்கள் உணவு உட்கொண்ட பின்னர், மிகவும் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த க்ருஷ்ணன், தூய்மையான குணம் கொண்டதான விதுரரின் உணவை உட்கொண்டான் – என்றது காண்க. இந்தச் செய்தியைக் கேட்ட துரியோதனன், க்ருஷ்ணனிடம் பாரதஸாவித்ரீ (13) - பீஷ்மத்ரோணாவதிக்ரம்ய மாம் சைவ மதுஸூதந கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷள போஜநம் – தாமரை போன்ற கண்கள் கொண்ட மதுஸூதனனே! பீஷ்மர், துரோணர் போன்றவர்களையும் என்னையும் ஒதுக்கிவிட்டு சூத்ரனாகிய விதுரரின் வீட்டில் நீ ஏன் உணவு உட்கொண்டாய் – என்றான். இதற்கு க்ருஷ்ணன் பாரதஸாவித்ரீ (23) - த்விஷதந்நம் ந போக்தவ்யம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா: - விரோதியின் உணவை உட்கொள்ளக்கூடாது, அவர்களுக்கு உணவை அளிக்கவும் கூடாது. நீ எனது ப்ராணனாக உள்ள பாண்டவர்களைப் பகைக்கிறாயே – என்றான். இதன் மூலம் துரியோதனன் உரைத்தபடி விதுரரின் ஜாதி குறித்த கருத்த க்ருஷ்ணன் ஏற்றான் என்றாகிறது. ஆனால் அந்தணர்களும், க்ஷத்ரியர்களும் சூத்ரன் ஒருவனால் அளிக்கப்பட்ட உணவை உட்கொள்வது கூடாது அல்லவோ என்ற கேள்வி எழலாம். இதற்கு விடையாக, ஆபஸ்தம்ப ஸூத்ரம் (2-3-4) - ஆர்யாதிஷ்டிதா சூத்ரா அந்நஸம்ஸ்கர்த்தாரஸ்ஸ்யு: - அந்தணர்களால் நியமிக்கப்பட்ட சூத்ரர்கள் அவர்களுக்காக உணவைச் சமைக்க அனுமதிக்கப்படுகிறார்கள் – என்றது காண்க. கலியுகம் நீங்கலாக மற்ற யுகங்களில் சூத்ரர்களுக்கு இது போன்ற வரையறை ஏதும் இல்லை; காரணம் அவர்கள் ஆர்யர்களின் நியமனத்துக்கு ஏற்ப அவர்களுக்கு உணவைச் சமைக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் மஹாபாரதம் உத்யோகபர்வம் (76-43) - சுசிஸ்து ப்ரயதோ பூத்வா விதுரோந்நமுபஹாரத் – மிகவும் தூய்மையானவராகிய விதுரர், அந்த உணவை அளித்தார் – என்று கூறுவதன் மூலம் விதுரருக்கு இருந்த குணமேன்மை உரைக்கப்பட்டது.