Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 2)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

முன்னுரை

மூலம் – இப்படி த்வயத்தில் த்வதீயாந்தபதங்களாலே ப்ரகாசிதமான ஸித்தோபாய விஷயமாகவும், ஆக்யாதபதத்தாலே சொல்லப்பட்ட ஸாத்யோபாயவிஷயமாகவும் பிறக்கும் வ்யாகுலங்கள் சமிப்பிக்கும் வழி காட்டினோம். இவ் உபாயப்ரபாவ விஷயமாக ப்ரமாணங்கள் காட்டினவளவுக்கு ஏற நினைத்தும் குறைய நினைத்தும் வரும் கலக்கங்கள் சமிப்பிக்க வேணும்.

– இப்படியாக த்வய மந்த்ரத்தில் உள்ள இரண்டாம் வேற்றுமையுடன் கூடிய சொற்கள் (சரணௌ, சரணம்) மூலமாக உண்டாகின்ற ஸித்தோபாயம் குறித்த ஐயங்களும், ஸாத்யோபாய (ப்ரபத்தி) குறித்து ப்ரபத்யே என்னும் பதம் மூலமாக உரைக்கப்படும் விஷயங்களில் உள்ள ஐயங்களும் நீக்கப்பட்டன. இனி உபாயங்களுக்கு ப்ரமாணங்களில் காட்டப்பட்டதைக் காட்டிலும் சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் முக்கியத்வம் உள்ளதோ என்று சந்தேகம் கொள்கிறார்கள். இதனைப் போக்குவோம்.