Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 1)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

ஸ்வரூபம் யத்யாத்ருக் குண விபவ லீலாதி ச விபோ: ததாஜ்ஞாஸேதுச்ச ச்ருதிபிரவஸேயம் ததகிலம் ததா தத்பக்தாநாம் ததுபஸதநாதேச்ச மஹிமா யதா அதீதம் ஸத்பிர்யதிபதிமுகை: அத்யவஸித:

– ஸர்வேச்வரனின் ஸ்வரூபம் என்ன? அது எப்படிப்பட்டது? அவனுடைய குணங்கள், விபூதிகள், லீலைகள், திருமேனி ஆகியவை எவை, அவை எப்படிப்பட்டவை? பல்வேறு வர்ணங்களும், ஆச்ரமங்களும் எவை, அவற்றின் தர்மங்கள் எவை – போன்ர பலவற்றையும் வேதங்களால் உள்ளது உள்ளபடி அறியவேண்டியதாகும். இது போன்றே பகவானின் அடியார்கள், பகவானை அடையும் உபாயங்களான பக்தி போன்றவை ஆகியவற்றின் மேன்மைகள் என்ன என்பதை சாஸ்த்ரங்களில் கூறப்பட்டது போன்றே நம்முடைய பூர்வாசார்யர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.