Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 48)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
தத்தத் ஹைதுகஹேதுகே க்ருததீய: தர்க்க இந்த்ரஜால க்ரமே விப்ராணா: கதக ப்ரதாந கணநே நிஷ்டாம் கநிஷ்டாச்ரயாம் அத்யாத்ம ச்ருதி ஸம்ப்ரதாய கதகைரத்தா விசுத்தாசயா: ஸித்தோபாய வசீக்ரியாமிதி ஹி ந: ஸாத்யாம் ஸமத்யாபயந்
– அந்தந்த அறிவுள்ளவர்களின் தர்க்கவாதங்கள் என்னும் இந்த்ரஜால வித்யைகளில் இருந்து காப்பாற்றப்பட்ட புத்தியை உடையவர்களும், வாதம் செய்பவர்களில் முக்கியமானவர்கள் யார் என்று எண்ணும்போது சுண்டுவிரலை ஆதாரமாகக் கொண்ட இருப்பை உடையவர்களும், வேதாந்த சாஸ்த்ரங்களுடைய ஸம்ப்ரதாயம் என்னும் தேத்தாங்கொட்டைகளால் (இது நீரைத் தெளிய வைப்பதாகும்) நன்றாகவும் கலக்கம் ஏதும் இன்றியும் தெளிந்த மனம் கொண்டவர்களும் ஆகிய நம்முடைய ஆசார்யர்கள் செய்தது என்ன? ஸித்தோபாயமான ஸர்வேச்வரனை வசப்படுத்துவதற்குக் காரணமாக உள்ள பக்தி மற்றும் ப்ரபத்திகளை இந்த அதிகாரத்தில் உரைத்தபடி நமக்கு நன்றாக உபதேசித்தனர்.