Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 47)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே
– ஸர்வேச்வரன் கர்மபந்தங்களில் சிக்குண்ட ஜீவன்களில், ஒரு சிலரை மட்டும் தன்னுடைய கருணைக்குப் பாத்திரமாகும்படியாகத் தேர்ந்தெடுப்பதாக அவனைக் குறித்து விரிவாக உரைக்கும் ச்ருதிகள் கூறுகின்றன. ஆனால் அவன் இவ்விதம் தேர்ந்தெடுப்பதும் ஒரு சில காரணங்களைப் பற்றியே ஆகும். ஆகவே சாஸ்த்ரங்கள் கூறுகின்ற பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகிய சிறந்த உபாயங்கள், அந்தச் சாஸ்த்ரங்கள் கூறுவது போன்றே அவைகள் ஈச்வரனின் கருணையை வசீகரம் செய்யக்கூடியவை என்றும், அவற்றால் வசீகரிக்கப்படும் ஈச்வரனே சிறந்த உபாயம் என்றும் நாம் தெளிகிறோம். இதனால்தான், அனைத்து உலகங்களையும் தாங்கி நிற்கும் ஸர்வேச்வரனின் கருணையால் நாம் பிழைக்கிறோம்.