Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 45)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ரஹஸ்யத்ரயத்தில் ஸாத்யோபாயம் கைக்கொள்ளப்படவேண்டும்

மூலம் – இஸ் ஸாத்யோபாயம் இங்கு சோதிதமான கட்டளையிலே ரஹஸ்யத்ரயத்தில் யதாஸ்தாநம் அநுஸந்தேயம்.

– இந்த அத்யாயத்தில் கூறப்பட்ட ஸாத்யோபாயத்தை ரஹஸ்யத்ரயத்தை எங்கெல்லாம் எண்ணுகிறோமோ, அங்கெல்லாம் கைக்கொள்ளவேண்டும்.