Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 40)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
ஐந்துவிதமான தோஷங்கள் வராமல் தடுத்தல்
மூலம் – அந்யாபிகமநம் ஆகாதென்னுமிடத்தை “இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்” என்று பெரியாழ்வார் அருளிச்செய்தார். அந்யார்த்தப்ரவ்ருத்தி ஆகாதென்னுமிடத்தையும் “கூறை சோறு இவை வேண்டுவதில்லை” என்று அருளிச்செய்தார். அந்யயஜநம் ஆகாதென்னுமிடத்தை “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்” என்றும், “தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசையும் தகுமே” என்றும், “ஈன்றோளிருக்க மணை நீராட்டி” என்றும், “மற்றிங்கோர் புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற தாயிருக்க மணை வெந்நீராட்டுதீரோ? மாட்டாத தகவற்றீரே” என்றும் இத்யாதிகளிலே அருளிச் செய்தார்கள்.
– அந்யாபிகமநம் (மற்ற தேவதைகளைப் பற்றுதல்) என்பது செய்யத்தகாத ஒன்று என்பதை பெரியாழ்வார் தனது திருமொழியில் (5-3-3) - இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் – உனக்கு ஏற்ற கைங்கர்யங்களைச் செய்யும் நான், இனி மற்றொருவரின் வாசலில் நின்று வணங்கினால் உன்னுடைய தேஜஸ்ஸுக்கு அது தோஷம் அல்லவோ – என்றார். அந்யார்த்தப்ரவ்ருத்தி (தனக்காகப் பொருள் சேகரித்தல்) என்பதும் கூடாது என்பதை பெரியாழ்வார் திருமொழியில் (5-1-4) - கூறை சோறு இவை வேண்டுவதில்லை – உடையையும் உணவையும் நான் உன்னிடம் கேட்கமாட்டேன் – என்றது காண்க. அந்யயஜநம் (மற்ற தேவதைகளை ஆராதனை செய்தல்) என்பது கூடாது என்பதை கீழே உள்ள பல வரிகளில் கூறியதைக் காண்க: திருவாய்மொழி (4-6-10) - உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால் – மற்றொரு தெய்வத்தைத் தொழமாட்டாள் திருவாய்மொழி (2-2-4) - “தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசையும் தகுமே – ஸர்வேச்வரனாகிய எம்பெருமானுக்கு அல்லாமல் மலர்களும் ஆராதனையும் வேறு யாருக்கு ஏற்புடையது? திருவாசிரியம் (6) - ஈன்றோளிருக்க மணை நீராட்டி – பெற்ற தாய் உள்ளபோது, அவளை விடுத்து மரப்பாச்சி பொம்மைக்கு நீராட்டுவது போன்று பெரியாழ்வார் திருமொழி (11-6-6) - மற்றிங்கோர் புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற தாயிருக்க மணை வெந்நீராட்டுதீரோ? மாட்டாத தகவற்றீரே – ஸர்வேச்வரனை விடுத்து மற்ற பலரையும் தெய்வங்கள் என்று எண்ணிக் கொண்டாடும் உலகினரே! பெற்ற தாய் உள்ளபோது, அவளை விடுத்து மரப்பாச்சி பொம்மைக்கு வென்னீர் கொண்டு நீராட்டுவீர்களோ? அவனுக்குக் கைங்கர்யம் செய்ய இயலாதபடி அவன் கருணையைப் பெறாதவர்களே