Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 38)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பகவத் ஆராதநம் போன்றவற்றைச் செய்யவேண்டிய கட்டாயம்
மூலம் – இப்படி அநந்யப்ரயோஜந நிரந்தர பகவதநுஸந்தாந பரீவாஹமான கைங்கர்யத்திலே பகவச்சாஸ்த்ரோக்தமுமாய் வ்யாஸ தக்ஷாதி மஹர்ஷி மதங்களோடும் ஸங்கதமாய் “மறம் திகழும்” என்கிற பாட்டிலும், “இருமுப்பொழுதேத்தி” என்ற பாசுரத்துக்கு விவக்ஷிதமாக ஆசார்யர்கள் வ்யாக்யாநம் பண்ணின காலவிபாகத்தை அபிகச்சந் ஹரிம் ப்ராத: பச்சாத் த்ரவ்யாணி சார்ஜயந் அர்ச்சயம்ச்ச ததோ தேவம் மந்த்ராந் ஜபந்நபி த்யாயந்நபி பரம் தேவம் காலேஷூக்தேஷு பஞ்சஸு தர்மாநஸ்ஸதா சைவம் பாஞ்சகாலிக வர்த்தமநா ஸ்வார்ஜிதை: கந்தபுஷ்பாத்யை: சுபைச்சக்தயநுரூபத: ஆராதயந் ஹரிம் பக்த்யா கமயிஷ்யாமி வாஸராந் என்று பாஷ்யகாரர் அருளிச்செய்யக் கேட்டு வங்கிபுரத்து நம்பி நித்யத்திலே ஸங்க்ரஹித்தார். இப்படிப் பெரியஜீயர் உள்ளிட்டார் நித்யங்களிலும் கண்டுகொள்வது. இவற்றிலுள்ள வைஷம்யங்கள் அவ்வோ ஸம்ஹிதாவிசேஷங்களிலே சொல்லும் விகல்பங்களாலே ஸங்கதங்கள். இப்படியாகையாலே ந தேவலோகா க்ரமணம், பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா, யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே தவ தாஸ்யைகபோகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: கர்மணா மநஸா வாசா சிரஸா வா கதஞ்சந் த்வாம் விநா நாந்யமுத்திச்ய கரிஷ்யே கிஞ்சித் அப்யஹம் “தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே” என்கிறபடியே பகவத் ப்ரீதிமாத்ரம் ப்ரயோஜநமான கைங்கர்யத்திலே ஸ்வாசார்யோபதிஷ்டமாயிருப்பதொரு சாஸ்த்ரீய ப்ரக்ரியைக் கொண்டு யதாகாலம் அந்வயிக்க ப்ராப்தம்.
– காலை நேரங்களில் ஸர்வேச்வரனிடம் சென்று, அதன் பின்னர் அவனை ஆராதிப்பதற்குத் தேவையான பொருட்களைச் சேகரித்து, அதன் பின்னர் அவனை ஆராதனம் செய்து, அதன் பின்னர் அவனைக் குறித்த மந்த்ரங்களை ஜபித்தபடி இருந்து, பின்னர் மிகவும் உயந்தவனாக உள்ள அவனை எப்போதும் த்யானித்தபடி இருப்பேன். இப்படியாக ஐந்து காலங்களில் அவனை ஆராதித்தபடி எனது பொழுதைப் போக்குவேன். ஒவ்வொரு நாளையும் ஐந்தாகப் பிரித்து, அந்தந்த வேளைகளில் செய்யப்பட வேண்டிய ஆராதனைகளைச் செய்தபடி இருப்பேன். என்னால் இயன்றவரை சேகரிக்கப்பட்ட சிறந்த சந்தனம், மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு அவனைப் பக்தியுடன் ஆராதனை செய்வேன் (இங்கு கூறப்பட்ட ஐந்து காலம் என்பது – அபிகமனம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம் மற்றும் யோகம் என்பதாகும்). இப்படியாக உள்ள விஷயங்கள் குறித்து பெரியஜீயர் போன்றவர்கள் அருளிச்செய்த அன்றாட அனுஷ்டானங்கள் குறித்த நூல்களில் மேலும் அறியலாம். இது போன்ற பல க்ரந்தங்களில் காணப்படும் சிறு வேறுபாடுகள் என்பவை, பல்வேறு ஸம்ஹிதைகளில் காணப்படும் வேறுபாடு காரணமாகவே உண்டாகின்றன என்று அறிக. இப்படியாக ப்ரபந்நன் ஒருவன் தன்னுடைய ஆசார்யனால் உபதேசம் செய்யப்பட்டபடி, சாஸ்த்ரங்களில் கூறப்பட்டபடி, ஸர்வேச்வரனுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவது மட்டுமே பலன் என்பதான கைங்கர்யத்திலே ஈடுபட்டபடி இருத்தல்வேண்டும். மற்ற எதுவும் அவனுக்கு மகிழ்வு உண்டாக்காது என்றும் எண்ணவேண்டும். இதனைக் கீழே உள்ள பல வரிகளும் உணர்த்துகின்றன: இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-5) - ந தேவலோகா க்ரமணம் – இராமா! உன்னை விட்டு ஸ்ரீவைகுண்டம் செல்வதையும் நான் விரும்பவில்லை. இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-27) - பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா – நீ சீதையுடன் உள்ளபோது, அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தபடி இருப்பேன். ஜிதந்தே ஸ்தோத்ரம் (2 – 8, 9) - யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே தவ தாஸ்யைகபோகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: கர்மணா மநஸா வாசா சிரஸா வா கதஞ்சந் த்வாம் விநா நாந்யமுத்திச்ய கரிஷ்யே கிஞ்சித் அப்யஹம் – எனக்கு எந்தக் குலத்தில் பிறவி உண்டானாலும் அப்படியே இருக்கட்டும், யார் மூலமாகவேனும் பிறப்பு இருக்கட்டும், ஆனால் உன்னுடைய கைங்கர்யம் என்னும் இன்பத்தில் மட்டுமே எங்கும், எப்போதும் எனக்கு மகிழ்ச்சி உண்டாகவேண்டும். உன்னைத் தவிர மற்ற எந்த ஒரு தெய்வத்தையும் நான் எண்ணியபடி எனது சரீரம், மனம், வாக்கு, தலை போன்றவற்றால் எந்தச் செயலையும் செய்யமாட்டேன். திருவாய்மொழி (2-9-4) - தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே – தன்னுடைய மகிழ்ச்சிக்காக அவன் என்னை ஈடுபடுத்திக் கொள்வதே எனக்குப் பலனாகும்.
– இப்படியாக இடைவிடாத த்யானத்தின் விளைவாக உள்ளதும், மற்ற எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் செய்யப்படுவதும், ஒருநாளைக்கு ஐந்துவிதமான ஆராதனையுடன் கூடியதும் ஆகிய பகவத் கைங்கர்யம் என்பது பாஞ்சராத்ர ஆகம சாஸ்த்ரங்களிலும், வ்யாஸர் மற்றும் தக்ஷர் ஆகிய மஹரிஷிகளின் வாக்குகளிலும் தெளிவாகவே உள்ளது. இந்தக் கருத்து பெருமாள் திருமொழி (1-7) – மறம் திகழும் –என்றுள்ள பாசுரத்தில், (1-7) – இருமுப்பொழுதேத்தி - கொடுமையான பல சிந்தனைகள் கொண்ட மனதை வசப்படுத்தி, ஐந்து காலங்களிலும் ஆராதித்து – என்று ஆசார்யர்கள் வ்யாக்யானம் இட்டது காண்க. இப்படியாக இந்தப் பாசுரத்தில் கூறப்பட்டபடி உள்ள ஐந்துகால ஆராதனை என்பதைக் குறித்து ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்ததைக் கேட்ட வங்கிபுரத்து நம்பி தன்னுடைய காரிகையில் (34-36) கீழே உள்ள வரிகளை அருளிச்செய்தார்: அபிகச்சந் ஹரிம் ப்ராத: பச்சாத் த்ரவ்யாணி சார்ஜயந் அர்ச்சயம்ச்ச ததோ தேவம் மந்த்ராந் ஜபந்நபி த்யாயந்நபி பரம் தேவம் காலேஷூக்தேஷு பஞ்சஸு தர்மாநஸ்ஸதா சைவம் பாஞ்சகாலிக வர்த்தமநா ஸ்வார்ஜிதை: கந்தபுஷ்பாத்யை: சுபைச்சக்தயநுரூபத: ஆராதயந் ஹரிம் பக்த்யா கமயிஷ்யாமி வாஸராந்