Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 37)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
சரமச்லோகம் குறித்த ஐயங்களுக்கான கண்டனம்
மூலம் - இதுவும் அநுபபந்நம்: சரணம் த்வாம் ப்ரபந்நா யே த்யாநயோக விவர்ஜிதா: தே அபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணம் பதம் என்றும், யத்யேந காமகாமேந ந ஸாத்யம் ஸாதநாந்தரை: முமுக்ஷுணா யத்ஸாங்க்யேந யோகேந ந ச பக்தி: ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: தேந தேநாப்யதே தத்தத் ந்யாஸேநைவ மஹாமுநே பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்தம: என்றும், இத்யாதி வசனங்களாலே ஸ்வதந்த்ர ப்ரபத்தி ஸித்தித்தால் இந்நிஷ்டையுடையவனுக்கு ஸ்ரீவைகுண்டகத்யத்திற்படியிலே ஸ்வயம் பலமாக த்யேயோ நாராயணஸ்ஸதா என்கிற அர்த்தத்தில் தன் விழுக்காடு அந்வயத்துக்கு விரோதமில்லை. இது அரோகனுக்கும் ஆரோக்யார்த்திக்கும் க்ஷீரம் ஸேவ்யமென்றதோடொக்கும். ஸாங்கமான த்யாநவிசேஷம் ஸர்வாதிகாரமன்றேயாகிலும் பகவத்விஷயத்தில் அதிகாராநுரூபமாக அறியலாமளவும் “நிரந்தரம் நினைப்பதாக நீ வேண்டுமே” இத்யாதிகளிற்படியே அநுஸந்திக்கவும் குறையில்லை. பாஷ்யகாரரும் இவ்வுபாயநிஷ்டையைச் சிறிய கத்யத்திலும் பெரிய கத்யத்திலும் அருளிச்செய்து, ஸ்ரீவைகுண்டகத்யத்திலும் இந்நிஷ்டையைச் சுருக்கிக் காட்டி, இருந்த நாள் ப்ராப்யருசி குலையாதே வளர்ந்து போகும்படிக்கு ஈடான அநுஸந்தாந விசேஷத்தை ததச்ச ப்ரத்யஹம் ஆத்மோஜ்ஜீவநாய ஏவம் அநுஸ்மரேத் என்று தொடங்கி அருளிச்செய்தார். இப் ப்ரபந்நனுக்குப் “பூசித்தும் போக்கினேன் போது” என்கிற அநந்யப்ரயோஜநமான பூஜாவிசேஷத்தை அத பரமைகாந்திநோ பகவதாராதந ப்ரயோஜகம் வக்ஷ்யே பகவத் கைங்கர்யைகரதி: பரமைகாந்தீ பூத்வா என்று தொடங்கி நித்யத்திலே அத்யர்த்த ப்ரியாவிரத விசததம ப்ரத்யக்ஷரூபாநுத்யாநேந த்யாயந்நாஸீத என்று அருளிச்செய்தார்.
– இவர்கள் கூறுவது பொருந்தாத வாதமாகும். கீழே உள்ள வரிகள் காண்க: ப்ராஹ்மபுராணம் (53) - சரணம் த்வாம் ப்ரபந்நா யே த்யாநயோக விவர்ஜிதா: தே அபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணம் பதம் – யார் ஒருவர் பக்தியோகம் இயற்றுவதற்கான சக்தி இன்றி, உன்னையே உபாயமாக அடைகிறாரோ, அப்படிப்பட்டவர்களும் மரணத்தைக் கடந்து உன்னுடைய இடமாகிய பரமபதத்தை அடைகிறார்கள். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37, 25 – 27) - யத்யேந காமகாமேந ந ஸாத்யம் ஸாதநாந்தரை: முமுக்ஷுணா யத் ஸாங்க்யேந யோகேந ந ச பக்தி: ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: தேந தேநாப்யதே தத்தத் ந்யாஸேநைவ மஹாமுநே பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்தம: - பயனில் விருப்பம் கொண்ட பலராலும், எந்தெந்த பலன்கள் மற்ற உபாயங்களால் அடைய இயலாதோ, முமுக்ஷுவால் மோக்ஷம் என்னும் பலன் கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவற்றால் அடைய இயலாதோ அப்படிப்பட்ட பலவிதமான பலன்களும் ப்ரபத்தியால் அடையப்படுகின்றன. அப்படிப்பட்ட ப்ரபத்தி மூலமே புருஷோத்தமனாகிய பரமாத்மாவும் அடையப்படுகிறான். எங்கு சென்றால் மீண்டும் திரும்புவது என்பது இல்லையோ, அந்த இடமே முமுக்ஷுக்களால் விரும்பப்படும் இடமாகும். மேலே உள்ள வரிகளின்படி ஒருவன் வேறு எதனையும் கைக்கொள்ளாமல் ப்ரபத்தியை மட்டுமே நேரடியான உபாயமாகக் கொண்டால், அவனுக்கு ஸ்ரீவைகுண்டகத்யத்தில் அருளிச்செய்தபடி, ப்ரபத்தியின் பலனாக, மஹாபாரதம் (178-11) - த்யேயோ நாராயணஸ்ஸதா – எப்போதும் நாராயணனையே த்யானிக்கக் கடவன் – என்பதற்கு ஏற்ப உள்ள நிலையானது தானாகவே அவனுக்குக் கைகூடுகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இது பாலானது எவ்விதம் ஆரோக்யமாக உள்ளவனுக்கும், உடல்நிலை குன்றியவனுக்கும் ஒரே போன்று உள்ளதோ, அது போன்று ஆகும். அங்கங்களுடன் கூடிய த்யானம் என்பது அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது அல்ல (அனைவருக்கும் அதற்குத் தகுதி இல்லை என்று கருத்து) என்றபோதிலும், பகவத்விஷயத்தைப் பொறுத்தவரை திருச்சந்தவிருத்தம் (101) - நிரந்தரம் நினைப்பதாக நீ வேண்டுமே – நான் உன்னை எப்போதும் நினைக்கும்படியாக நீ உனது திருவுள்ளத்தில் பற்றவேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப, த்யானம் கைகூடாது என்பது இல்லை. இப்படிப்பட்ட ப்ரபத்தியை ஸ்ரீபாஷ்யகாரர் ஸ்ரீரங்க கத்யத்திலும், சரணாகதி கத்யத்திலும் அருளிச் செய்தார். மேலும் இதனை ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் சுருக்கமாக அருளிச்செய்தார். மேலும் இந்த உலகில் உள்ள காலம் முடிய அடையப்படும் இலக்கான ஸர்வேச்வரன் மீது உள்ள ருசி குறையாமல் இருப்பதற்காக, ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் - ததச்ச ப்ரத்யஹம் ஆத்மோஜ்ஜீவநாய ஏவம் அநுஸ்மரேத் – ஒவ்வொரு நாளும் தான் பிழைத்திருக்கும் பொருட்டு, இவ்விதமாக த்யானம் செய்யவேண்டும் – என்று அருளிச்செய்தார். மேலும் இப்படிப்பட்ட ப்ரபந்நன் தன்னுடைய காலத்தை மற்ற பலன்களை எதிர்பாராமல், நான்காம் திருவந்தாதி (63) - பூசித்தும் போக்கினேன் போது – அவனை வணங்கியும் பூஜித்தும் காலத்தைக் கழித்து – என்றபடியே இருப்பான் என்னும் கருத்தை தன்னுடைய நித்யம் என்னும் நூலில் அருளிசெய்தார். இதனை அந்த நூலில் - அத பரமைகாந்திநோ பகவதாராதந ப்ரயோஜகம் வக்ஷ்யே பகவத் கைங்கர்யைகரதி: பரமைகாந்தீ பூத்வா ... அத்யர்த்த ப்ரியாவிரத விசததம ப்ரத்யக்ஷரூபாநுத்யாநேந த்யாயந்நாஸீத – பரமைகாந்திகள் ஸர்வேச்வரனுக்கு ஆராதனை செய்யும் வரிசையைக் கூறுகிறேன். ஸர்வேச்வரனுடைய கைங்கர்யம் என்பதில் மட்டுமே ஆசை கொண்ட பரமைகாந்தி ஆகி ... எல்லையற்ற அன்புடன், வேறு எந்தவிதமான எண்ணங்களும் இல்லாமல், தன்னுடைய கண்களால் நேரடியாகவே ஸர்வேச்வரனைக் காண்பதாகவே எண்ணியபடி த்யானம் செய்தபடி இருக்கவேண்டும் – என்றார்.