Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 36)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

சரமச்லோகம் குறித்த ஐயங்களுக்கான கண்டனம்

மூலம்– வேறேசிலர் ப்ரபத்தி சாஸ்த்ரத்தோடு சாஸ்த்ராந்தரங்களோடு வாசியற ஸர்வசாஸ்த்ரங்களுக்கும் ப்ரவர்த்தகரான வ்யாஸாதிகள்:ஆலோடய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயண: ஸதா என்றும், ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்த்வஸம்ஸ்திதை: என்றும், ஸ்மர்த்தவ்யஸ்ஸததம் விஷ்ணு: என்றும் இப்படி நிஷ்கர்ஷியா நிற்க, ஸக்ருத் ப்ரபத்தி மாத்ரத்தாலே மோக்ஷமாகக் கூடுமோ? மாமேவ யே ப்ரபத்யந்தே இத்யாதிகள் அங்கப்ரபத்தி விஷயங்களானாற் போலே சரமச்லோகாதிகளும் ஸபரிகர ப்ரபத்தியை பக்த்யங்கமாக விதிக்கின்றனவாக வேண்டாவோ என்று சொல்லுவார்கள்.

– மேலும் சிலர் எழுப்பும் ஆக்ஷேபம்: ப்ரபத்தி சாஸ்த்ரங்களை மற்ற அனைத்து சாஸ்த்ரங்களுடன் வேறுபாடு இல்லாமல் பரவச்செய்த வ்யாஸர் உள்ளிட்ட பலரும் கீழே உள்ள பல வரிகளில் உரைப்பது போன்று முடிவு செய்தனர். மஹாபாரதம் (178-11) - ஆலோடய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயண: ஸதா – அனைத்து சாஸ்த்ரங்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்து, பலவிதமான யுக்திகள் மூலம் விசாரித்தபோது, நாராயணனே எப்போதும் த்யானித்தபடி இருக்கத்தக்கவன் என்பது மட்டுமே உறுதியாகிறது. ஹரிவம்ஸம் (132-14) - ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்த்வஸம்ஸ்திதை: - ஸாத்விகர்களால் எப்போதும் த்யானிக்கத்தக்கவன் விஷ்ணுவே ஆவான் ஹரிவம்ஸம் (132-14) - ஸ்மர்த்தவ்யஸ்ஸததம் விஷ்ணு: - விஷ்ணுவை எப்போதும் நினைக்கவேண்டும் மேலே உள்ள வரிகளின்படி மோக்ஷ காலம் உண்டாகும்வரை எப்போதும் விஷ்ணுவையே த்யானித்தபடி இருத்தல்வேண்டும் என்றாகிறது; இப்படி உள்ளபோது, ஒரேமுறை ப்ரபத்தி செய்வதால் மோக்ஷம் கிட்டிவிடுமோ? கீதையில் (7-14) - மாமேவ யே ப்ரபத்யந்தே – என்னிடம் ப்ரபத்தி செய்தவர்கள் மாயையைக் கடக்கிறார்கள் – போன்ற வாக்கியங்கள் மூலம் பக்தியின் அங்கமாக அல்லவோ ப்ரபத்தி கூறப்படுகிறது? இது போன்றே சரமச்லோகம் முதலானவையும் பக்தியின் அங்கமாகவே ப்ரபத்தியைக் கூறுகின்றன என்றே கொள்ளவேண்டும். இப்படியாகச் சிலர் உரைப்பார்கள்.