Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 32)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தி, ப்ரபத்திகளில் விச்வாஸம் தளர்வது குறித்த சந்தேகங்களும் சமாதானமும்

மூலம் - 2. இப்படியே ஆவ்ருத்த்யநாவ்ருத்த்யாதிகளாலே விஷமஸ்வபாவங்களான உபாஸந ப்ரபதனங்கள் ஏக பல ஸாதநமாகக் கூடுமோவென்னில் இதுக்கு உத்தரமும் அதிகாரி விசேஷத்தாலே லோக வேதங்களிற்படியே ஸித்தம்.

– பக்தியோகம் என்பதை இடைவிடாமல் செய்தபடி இருக்கவேண்டும், ப்ரபத்தி என்பதை ஒரு பலனுக்காக ஒருமுறை மட்டுமே இயற்றவேண்டும் என்னும் விதி உள்ளது. ஆக இவை இரண்டும் வெவ்வேறுவிதமான தன்மைகள் கொண்டவை என்று ஆகின்றன. இப்படி உள்ளபோது, இவை ஒரே பலனை அளிப்பதற்கு உபாயமாக உள்ளன என்பது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். இவற்றைக் கைக்கொள்ளும் அதிகாரிகளின் சக்திக்கு ஏற்ப இவை பலனை அளிப்பதில் தடையில்லை. உலகில் செல்வம் என்னும் ஒரே பலனை அளிப்பதற்கு கடுமையான தொழில்களும், மிகவும் சுலபமான தொழில்களும் உள்ளதைக் காணலாம். இதே போன்று, ஸ்வர்க்கம் என்னும் ஒரே பலனைப் பெறுவதற்கு வேதங்களில் எளிமையான யாகங்களும், கடுமையான தவங்களும் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.