Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 20)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு
மூலம் – கர்மோபார்ஜிதங்களான கரணகளேபரங்களாகிற உபாதிகளைக் கொண்டு அநுஷ்டிக்கையாலே கர்மயோகாதிகள் நிருபாதிக ஸ்வரூப விருத்தங்கள் என்பார்க்கும் ஸ்வரூபஜ்ஞாந த்வயச்ரவணாதிகளும் மந:ப்ரப்ருதி ஸாபேக்ஷங்களாகையாலே துல்ய தோஷங்களாம்.
– கர்மயோகம் போன்ற உபாயங்களைக் கைக்கொள்ளும்போது, அவற்றை உடல் உறுப்புகள் மற்றும் புலன்கள் கொண்டே இயற்றவேண்டும்; இத்தகைய சரீரம் போன்றவை, பூர்வகர்மங்களால் உண்டாவது என்பதால், கர்மயோகம் முதலானவை ஆத்மஸ்வரூபத்திற்கு விரோதமானவை என்று ஒரு சிலர் கூறுவர். ஆத்மஸ்வரூபத்தைக் குறித்த ஞானம் பெறுவதற்கும், த்வயம் போன்றவற்றை அனுஷ்டிப்பதற்கும் மனம் போன்றவை அவசியம் வேண்டியதாகையால், இந்த வாதம் ஏற்க இயலாத ஒன்றாகும்.