Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 11)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
ப்ரபத்தி விதிக்கப்படுவதாகக் கொண்டால் ஈச்வரனின் ஸ்வபாவத்திற்கு விருத்தம் என்பதற்கான மறுப்பு
மூலம்– ப்ரபத்திக்கு ஸாதநத்வமாதல் ஸித்தஸாதந ஸஹகாரித்வமாதல் கொள்ளில் ஸித்தோபாயமான ஈச்வரனுடைய ஏகத்வம் ஸித்தத்வம் பரமசேதநத்வம் பரமகாருணிகத்வம் ஸர்வசக்தித்வம் நிரபேக்ஷத்வம் முதலான ஸ்வபாவ விசேஷங்களுக்கு விருத்தமாமென்னும் ப்ரஸதங்கள் ச்ருதி ஸ்ம்ருதி விரோத வ்யாப்திசூந்யத்வாதி தோஷங்களாலே தர்க்கமாஸங்கள். இவற்றை ஸத்தர்க்கங்களாக நினைக்கில் உபாஸநத்துக்கு இசைந்த ஸாதநமாவாதிகளிலும் இப்ப்ரஸதங்கள் வரும்.
– ப்ரபத்தியை (மோக்ஷ) உபாயமாகவோ அல்லது ப்ரபத்தியானது ஸித்தோபாயமான எம்பெருமானுக்கு உதவுவதாகவோ கொண்டால் – ஸித்தோபாயமான எம்பெருமான் மட்டுமே உபாயம், அவனே ஸித்தமான உபாயம், அவன் கருணை மிகுந்தவன், அவன் எதனையும் செய்யும் வல்லமை கொண்டவன், மற்ற யாருடைய உதவியையும் எதற்கும் எதிர்பாராதவன் – போன்ற ஸர்வேச்வரனின் ஸ்வரூபங்களுக்கு விரோதம் உண்டாகும் என்று சிலர் வாதாடலாம். இவர்களுடைய இந்த வாதங்கள் ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகளுக்கு விரோதமாக உள்ளன. இவர்களின் வாதம் எந்தக் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இல்லை. இவர்களுடைய இத்தகைய வாதங்கள் வெறும் தர்க்கவாதங்களாகத் தோன்றுகின்றன அல்லாமல், பொருத்தமான வாதங்களாகத் தோன்றவில்லை. இவ்வாதங்களை சரியானவை என்று ஏற்றுக் கொண்டால், உபாஸனைக்குத் துணையாக உள்ள அங்கங்கள்கூட அவசியம் அற்றது என்றே தேறிவிடும்.