Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 10)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

தன்னுடைய முயற்சி நீங்குதல் என்பதே ப்ரபத்தி என்பதற்கான மறுப்பு

மூலம் – இங்கு தத்த்வஜ்ஞாநமுடையவனுக்கு ஸ்வரக்ஷணார்த்த ஸ்வ வ்யாபார நிவ்ருத்தியே ப்ரபத்தியாய் ஸர்வதர்ம ஸ்வரூப த்யாகமாத்ரம் ஸாத்யமாக விதிக்கப்படுகிறதென்பார்க்கு நிவ்ருத்திரூபமேயாகிலும் ஸாத்யமாக விதிக்கப்பட்ட ஸர்வதர்மத்யாகந்தான் ஸ்வரக்ஷணார்த்த ஸ்வ வ்யாபாரமாகையாலே ஸ்வவசன விரோதமும் ஸாங்கப்ரபத்தி விதாயகமான வாக்ய விரோதமும் வரும்.

– ப்ரபத்தி என்பது தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முயலாமல் இருக்கை என்றும், அதனைக் கைக்கொள்ள அனைத்து தர்மங்களையும் (உபாயங்களையும்) கைவிடுதல் என்பதே விதிக்கப்பட்டது என்றும் சிலர் கூறுவர். இதற்கு பதில் கூறுவோம். அனைத்து தர்மங்களையும் கைவிடுதல் என்பதே ஒரு செயல் என்பதையும், இந்தச் செயல் என்பது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்யப்படுவது என்றும் அல்லவோ ஆகிறது? இதனால் அவர்கள் கூறும் கருத்தான “தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முயலாமல் இருக்கையே ப்ரபத்தி” என்பதற்கு முரண்பாடு உண்டாகிறது. மேலும் இவ்விதம் கொண்டால் மேலே கூறப்பட்டதான “ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியைச் செய்யக்கடவன்” என்னும் விதிவாக்கியத்துடன் முரண்பாடு உண்டாகும்.