Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 8)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
சேஷத்வ அநுஸந்தானம் மட்டுமே உபாயம் என்பது கண்டிக்கப்படுதல்
மூலம்– ஜ்ஞாநாந்மோக்ஷோபதேசோ ஹி தத்பூர்வோபாஸநாதிநா உபாஸநாதி ரூபாத்வா ஜ்ஞாநாந்மோக்ஷோ விவக்ஷித: சாஸ்த்ர ஜந்யமான சேஷத்வ ஜ்ஞாநமாத்ரம் நிவ்ருத்தி தர்மங்களான ந்யாஸோ பாஸநாதிகள் எல்லாவற்றுக்கும் பொதுவாயிருக்கும். சேஷவ்ருத்திரூபமான கைங்கர்யமே முமுக்ஷுவுக்குப் புருஷார்த்த காஷ்டையாகையாலே சேஷத்வமறியாதே மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கை கடியாதிறே. சேஷத்வ ஜ்ஞாநமின்றிக்கே மோக்ஷார்த்தமாக விதித்த தர்மங்களை அநுஷ்டித்தானாகிலும் இத்தர்மங்கள் தாமே சேஷத்வ ஜ்ஞாநத்தையும் உண்டாக்கிப் பூர்ணாநுஷ்டாந முகத்தாலேயிறே மோக்ஷ ஹேதுவாவது. ஆகையால் இங்கு விதேயமான ஸ்மர்ப்பணம் சேஷத்வ ஜ்ஞாநமாத்ரமன்று. மற்று ஏதென்னில், சேஷத்வ ஜ்ஞாநாதியுக்தமான ஸ்வரக்ஷாபரந்யாஸம். வாக்யமாத்ரேண ஸித்தத்வாத் ஸித்தோபாய இஹோச்யதே ப்ரபத்திரிதி வாத: அபி விதிநாத்ர விஹந்யதே
– ஜ்ஞாநாந்மோக்ஷோபதேசோ ஹி தத்பூர்வோபாஸநாதிநா உபாஸநாதி ரூபாத்வா ஜ்ஞாநாந்மோக்ஷோ விவக்ஷித: - “தத்வஞானம் மூலம் மோக்ஷம் கிட்டும்” என்பதான கருத்தை இருவிதமாகப் பொருள் கொள்ளவேண்டும்; தத்வஞானம் மூலம் கிட்டுகின்ற உபாஸநம் மூலமாகவே மோக்ஷம் என்பது ஒருவிதம்; உபாஸநம் வடிவிலான ஞானம் மூலம் மோக்ஷம் என்பது மற்றொருவிதம் – என்று கொள்க. சாஸ்த்ரங்கள் மூலம் பெறப்பட்ட ஞானமான ”ஸர்வேச்வரனுக்குத் தாஸனாக உள்ள ஸம்பந்தம்” என்பது ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கவல்லதும் மோக்ஷத்திற்கான உபாயமாக உள்ளதும் ஆகிய பரந்யாஸம், உபாஸனை போன்ற அனைத்திற்கும் பொதுவானதே ஆகும். அடிமையாக உள்ள ஒருவனுக்கு முக்கியமான பணி என்பது எஜமானனுக்குச் செய்யும் கைங்கர்யமே என்பதாலும், இதுவே அடையவேண்டிய புருஷார்த்தங்களின் எல்லையாக உள்ளதாலும், ”நாம் ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ளோம்” என்பதான உறவுமுறையை அறியாமல், எந்த மோக்ஷ உபாயத்தையும் கைக்கொள்ள இயலாது. ஒருவன் இத்தகைய தாஸ்ய உறவுமுறையை அறியாமல் மோக்ஷத்திற்கான தர்மங்களை அவற்றின் விதிப்படி கைக்கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம்; அப்படிக் கொண்டாலும் அவன் கைக்கொண்ட அந்த தர்மங்களே அவனுக்கு தாஸ்ய உறவுமுறை குறித்த ஞானத்தை உண்டாக்கி, அதன் மூலம் மோக்ஷ உபாயத்தை அவனுக்கு பூர்ணமாக்கி விடுகின்றன. ஆக ஆத்மஸமர்ப்பணம் என்று விதிக்கப்பட்டது, வெறும் தாஸ்ய ஞானம் மட்டுமே அல்ல. வேறு என்ன என்றால், அத்தகைய தாஸ்ய ஞானத்துடன் கூடியதான, தன்னைக் காக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கும் செயலே ஆகும். வாக்யமாத்ரேண ஸித்தத்வாத் ஸித்தோபாய இஹோச்யதே ப்ரபத்திரிதி வாத: அபி விதிநாத்ர விஹந்யதே – ப்ரபத்தி என்று சொல்லப்படும் ஞானத்தின் வகை என்பது “ஸர்வேச்வரனே சரணம்” என்னும் சாஸ்த்ரங்களின் அடிப்படையில் அமைந்த ஞான வடிவே ஆகும்; இதனால்தான் அந்த ப்ரபத்தி ஞானத்தை சாஸ்த்ரங்கள் ஸித்தோபாயம் என்று கூறுகின்றன.