Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 4)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ப்ரபத்திக்கு அனைவரும் தகுதியானவர்கள் என்பதற்கான ஆக்ஷேபமும் சமாதானமும்

மூலம்– மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு: பாபயோநய: ஸ்த்ரீயோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்தி பராம் கதிம் என்று பகவதாச்ரயணமாத்ரம் ஸர்வஸாதாரணமாகச் சரண்யன் தானும் அருளிச் செய்தான். உபாஸநத்துக்கும் ப்ராரம்பம் த்ரைவர்ணிக சரீரத்திலேயானாலும் அவஸாநம் ஸர்வசரீரத்திலும் கூடுமென்னுமிடம் தர்மவ்யாதாதய: அப்யந்யே பூர்வாப்யாஸாஜ்ஜுகுப்ஸிதே வர்ணாவரத்வே ஸம்ப்ராப்தா: ஸம்ஸித்திம் ச்ரமணீ யதா என்று ஸ்ரீவிஷ்ணுதர்மத்திலே சொல்லப்பட்டது. இப்படி உபாஸநம் த்ரைவர்ணிகர்க்கே ஆரம்பணீயமானாற்போலே ப்ரபத்தியில் ஒரு நியாமகத்தாலே ஸாமாந்ய வசநத்துக்கு ஸங்கோசமில்லாமையாலும் விசேஷவசந ப்ராபல்யத்தாலும் இப்ப்ரபதநம் ஸர்வர்க்கும் யோக்யம். ஆனபின்பு இது தனக்கு விசேஷித்து வேண்டும் அதிகாராம்சமும் முன்பே சொன்னோம். அதஸ்த்ரைவர்ணிகத்வாதி: பாவ: அபாவ: அபி கஸ்யசித் நாதிகார: ப்ரபத்தேஸ்ஸ்யாத் ஆகிஞ்சந்யமநாச்ரித: இவ்வர்த்தத்தைக் “குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்” என்கிற பாட்டிலும், ஜநித்வாஹம் வம்சே என்கிற ச்லோகத்திலும் கண்டு கொள்வது. ஆகையால் சரண்ய சரணாகதி ஜ்ஞாநமும் ஆகிஞ்சந்யாதிகளுமுடைய ஸர்வஜாதீயர்க்கும் ப்ரபத்த்யதிகாரம் ஸித்தம்.

– பகவானை அண்டி நிற்பது என்பது அனைவருக்கும் பொதுவானதே என்பதை, அனைவருக்கும் புகலிடமாக உள்ள க்ருஷ்ணன் கீதையில் (9-38) - மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு: பாபயோநய: ஸ்த்ரீயோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்தி பராம் கதிம் – பார்த்தா! பாவம் செய்தவர்களின் வயிற்றில் பிறக்கின்ற பெண்கள், வைச்யர்கள், சூத்திரர்கள் ஆகியவர்களில் யார் என்னை வந்து அடைகின்றனரோ அவர்கள் உயர்ந்த கதிக்குச் செல்கிறார்கள் – என்றான். உபாஸனம் அல்லது த்யானம் என்பது மேல் மூன்று வர்ணத்தினரால் மட்டுமே தொடங்கப்படலாம் என்றபோதிலும், அதன் முடிவு என்பது எந்த வர்ணத்தில் சரீரம் எடுத்துப் பிறந்தாலும் கைகூடும்; இதனை ஸ்ரீவிஷ்ணுதர்மம் (10-2-29) - தர்மவ்யாதாதய: அப்யந்யே பூர்வாப்யாஸாஜ்ஜுகுப்ஸிதே வர்ணாவரத்வே ஸம்ப்ராப்தா: ஸம்ஸித்திம் ச்ரமணீ யதா - தர்மவ்யாதர் போன்றவர்கள் அருவருப்பான குலத்தில் பிறந்தபோதும், கடந்த பிறவியில் பக்தியோகம் கைக்கொண்டிருந்த காரணத்தால், அந்தப் பழக்கம் காரணமாக, இந்தப் பிறவியிலும் அதனையே பின்பற்றி, சபரி போன்று ஸித்தி அடைந்தனர் – என்றது. இப்படியாக உபாஸனம் அல்லது த்யானம் என்பது மேல் மூன்று வர்ணத்தினரால் மட்டுமே தொடங்கப்படலாம் என்பது போன்று, ப்ரபத்தி என்பதில் இது போன்று எந்தவிதமான தகுதித்தடைகளை விதிக்கின்ற பொதுவான வாக்கியங்கள் இல்லை. மேலும் ப்ரபத்திக்கான தகுதிகளைப் பற்றி உரைக்கின்ற வாக்கியத்திலும், அனைவரும் ப்ரபத்தியைக் கைக்கொள்ள அதிகாரம் உண்டு என்றே கூறப்பட்டுள்ளது. ப்ரபத்திக்கான தகுதிகளைப் பற்றி நாம் முன்பே விரிவாக உரைத்தோம். அதஸ்த்ரைவர்ணிகத்வாதி: பாவ: அபாவ: அபி கஸ்யசித் நாதிகார: ப்ரபத்தேஸ்ஸ்யாத் ஆகிஞ்சந்யமநாச்ரித: - ஆகவே ஒருவன் மூன்று வர்ணத்தைச் சேர்ந்தவனாக உள்ளதும், அவ்விதம் இல்லாமல் உள்ளதும், மற்ற உபாயங்கள் ஏதும் கைக்கொள்ளாமல் உள்ள நிலையை முன்னிட்டு, ப்ரபத்திக்கு அதிகாரம் ஆகாது – என்று உணர்க. இதனைக் கீழே உள்ள ப்ரமாணங்களில் காண்க: திருச்சந்தவிருத்தம் (90) - குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் – தர்மங்களைச் செய்வதற்கு ஏற்றதான நான்கு வர்ணங்களில் எதிலும் நான் பிறக்கவில்லை. ஸ்தோத்ரரத்னம் (61) - ஜநித்வாஹம் வம்சே – உன்னுடைய திருவடிகளில் மட்டுமே மனதை வைக்கக்கூடியவர்கள் தோன்றிய வம்சத்தில் பிறந்த நான், பாவங்கள் சூழ்ந்த மனம் கொண்டவனாக ஸம்ஸாரத்தில் மூழ்கியபடி உள்ளேன். ஆகவே ப்ரபத்தி என்பது சரணம் அடையத் தக்கவனாக உள்ள ஸர்வேச்வரனைப் பற்றி அறிந்தவர்களுக்கும், சரணாகதி குறித்து அறிந்தவர்களுக்கும், வேறு உபாயங்களைக் கைக்கொள்ளாமல் உள்ளவர்களுக்கும் – அவர்கள் எந்த வர்ணத்தினராக இருந்தாலும் ஏற்புடையதே என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.