Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 1)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

யதாதிகரணம் ப்ரபுர்யஜந தாந ஹோமார்சநா பரந்யஸந பாவநா ப்ரப்ருதிபி: ஸமாராதித: பலம் திசதி தேஹிநாமிதி ஹி ஸம்ப்ரதாயஸ்திதி: ச்ருதி ஸ்ம்ருதி குரு உக்திபி: நயவதீபி: ஆபாதி ந:

– அவரவர்களின் பலனை அளிப்பதில் சாமர்த்யம் கொண்டவனாக உள்ள ஸர்வேச்வரன், அவரவர்களுடைய அதிகாரத்திற்கு ஏற்ப இயற்றப்பட்ட யாகம் – தானம் –ஹோமம் – அர்ச்சனை – ப்ரபத்தி – பக்தி போன்றவைகளால் நன்றாக ஆராதிக்கப்படுகிறான். இதனால் அவன் ஜீவன்களுக்கு ஏற்ற பலன்களை அளிக்கிறான். இப்படியாகவே ப்ரஸித்தி பெற்ற நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் நிலை என்பது உள்ளது. இந்த நிலையானது சிறந்த ந்யாயங்களுடன் கூடியதான வேதங்கள், ஸ்ம்ருதிகள், ஆசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகள் ஆகியவற்றால் நமக்கு நன்றாக விளங்குகிறது.