Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 37)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

விச்ராம்யத்பி: உபரி உபரி அபி திவாநக்தம் வஹிர்தர்சநௌ: அஸ்மத் தேசிக ஸம்ப்ரதாய ரஹிதைரத்யாபி நாலக்ஷித: ஸ்வப்ராப்தே ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண: ச்ருதௌ ஸத்த்வஸ்தேஷு பஜேத ஸந்நிதிமஸௌ சாந்தாவதி: சேவதி:

– எம்பெருமான் என்னும் புதையல் குறித்து தொடர்ந்து இரவு மற்றும் பகல் ஆகிய காலங்களில் தொடர்ந்து அந்தப் புதையல் மேலே அமர்ந்து ஒரு சிலர் ஓய்வு எடுத்தபடி இருக்கக்கூடும். இப்படியாக உள்ளவர் அவர்கள் நம்முடைய ஆசார்யர்களின் ஸம்ப்ரதாயத்தைச் சேராமல் இருந்தபடி, அந்தப் புதையலை இதுவரை காணாமல் இருந்தபடி உள்ளனர். அந்தப் புதையல் தன்னை அடைவதற்குத் தானே உபாயமாக உள்ளதாகவே வேதங்களாக் முழங்கப்படுகின்றன. எல்லையற்ற ஸர்வேச்வரன் என்னும் இந்தப் புதையலானது வெளியில் தேடப்பட வேண்டிய அவசியம் இன்றி, ஸத்வகுணம் கொண்டவர்களின் அருகிலேயே (அவர்களுள்ளேயே) இருக்கின்ற இருப்பைக் கொண்டதாகும்.