Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 35)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
பிராட்டியும் உபாயம் என்பதால், “உபாயம் ஒன்று மட்டுமே” என்பதற்கு முரண்பாடு இல்லை
மூலம்– ஸமஸ்த புருஷார்த்தாநாம் ஸாதகஸ்ய தயாநிதே: ஸ்ரீமத: பூர்வஸித்தத்வாத் ஸித்தோபாயமிமம் விது: பக்தி ப்ரபத்தி ப்ரமுகம் தத்வசீகார காரணம் தத்தத்பலார்த்தி ஸாத்யத்வாத் ஸாத்யோபாயம் விதுர்புதா: ஸாத்யோபாயோத்தரங்கேண ஸித்தோபாயஸ்ய சேஷிண: லீலாப்ரவாஹ: காருண்ய ப்ரவாஹேண நிருத்யதே தேநைவ ஸர்வே லீயந்தே ஸிகதாஸேது பந்தவத் ஸ்வதந்த்ரஸ்யாபி ஸங்கல்பா: ஸ்வகைங்கர்ய நிரோதகா: ப்ரஸாதநஸ்யோபாயத்வே சாஸ்த்ரீயேபி பலம் ப்ரதி கர்த்துத்வாவ்யவதாநாத்யை: ஸித்தோபாயப்ரதாநதா ஸ்வதந்த்ரந்யாஸநிஷ்டாநாம் ஸித்தோபாயே விபௌ ஸ்திதி: க்ஷணாத் ஸ்வயத்ந விரதி வ்யக்த்யை ப்ரோக்தா விசேஷத: அதோ யதர்த்தம் ஸ்வபர: ஸித்தோபாயே நிவேசித: ததர்த்தம் சாந்தயத்ந: அஸௌ ஸித்தோபாயம் ப்ரதீக்ஷதே ப்ரபத்தேர்லக்ஷணே மந்த்ரே விதௌ வாக்யாந்தரேஷு ச பாஷ்யாதௌ ஸம்ப்ரதாயே சோபாயத்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் பூர்வஸித்தஸ்ய தேசாதே: தர்மத்வம் யத்விதிஷ்யதே ஏவம் தத்வவித: ப்ராஹு: க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்
– (மேலே உள்ள பல ச்லோகங்களுக்கான பொருள்) ஸமஸ்த புருஷார்த்தாநாம் ஸாதகஸ்ய தயாநிதே: ஸ்ரீமத: பூர்வஸித்தத்வாத் ஸித்தோபாயமிமம் விது: - அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லவனும், கருணைக்கு இருப்பிடமாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீமந்நாராயணன் ப்ரபத்தி செய்வதற்கும் முன்பே உள்ளதால் அவனையே ஸித்தோபாயமாக பூர்வர்கள் அறிகிறார்கள். பக்தி ப்ரபத்தி ப்ரமுகம் தத்வசீகார காரணம் தத்தத்பலார்த்தி ஸாத்யத்வாத் ஸாத்யோபாயம் விதுர்புதா: - அவனை வசீகரிப்பதற்குக் காரணமாக உள்ளவை பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகும். இவை ஸாத்யோபயங்கள் எனப்படுகின்றன. இதன் காரணம் இவை அந்தந்த பலன்களை விரும்புகிறவர்களால் கைக்கொள்ளப்பட வேண்டியவை என்பதால் ஆகும் என்று அறிஞர்கள் உணர்கின்றனர். ஸாத்யோபாயோத்தரங்கேண ஸித்தோபாயஸ்ய சேஷிண: லீலாப்ரவாஹ: காருண்ய ப்ரவாஹேண நிருத்யதே – ஸாத்யோபாயங்கள் வெகுவாக வளர்வதன் காரணமாக எம்பெருமானின் கருணை அளவற்றுப் பெருகிப் பாய்கிறது. இந்த வெள்ளத்தின் மூலம் ஸித்தோபாயமாகவும் எஜமானனாகவும் உள்ள அவனது லீலையின் ப்ரவாஹம் என்பது தடுக்கப்படுகிறது. தேநைவ ஸர்வே லீயந்தே ஸிகதாஸேது பந்தவத் ஸ்வதந்த்ரஸ்யாபி ஸங்கல்பா: ஸ்வகைங்கர்ய நிரோதகா: - இத்தகைய அவனுடைய காருண்யம் என்னும் வெள்ளம் காரணமாக, அவனுக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தடங்கலாக உள்ள அவனுடைய சுதந்திரமான ஸங்கல்பங்கள் போன்ற அனைத்தும் மண்ணால் கட்டப்பட்ட அணை போன்று அழிகின்றன. ப்ரஸாதநஸ்யோபாயத்வே சாஸ்த்ரீயேபி பலம் ப்ரதி கர்த்துத்வாவ்யவதாநாத்யை: ஸித்தோபாயப்ரதாநதா – எம்பெருமானின் அனுக்ரஹத்தை அடைவதற்குக் காரணமாக உள்ள பக்தி மற்றும் ப்ரபத்தி போன்றவைகளுக்கு பலன்களை அளிக்கவல்ல உபாயமாக உள்ள தன்மை உண்டு என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ஆனாலும், பலனை அளிப்பதில் நேரடி கர்த்தாவாக உள்ள தன்மை, காரணமாக உள்ள தன்மை போன்றவற்றுக்கு ஸித்தோபாயமான எம்பெருமானே ப்ரதானம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்வதந்த்ரந்யாஸநிஷ்டாநாம் ஸித்தோபாயே விபௌ ஸ்திதி: க்ஷணாத் ஸ்வயத்ந விரதி வ்யக்த்யை ப்ரோக்தா விசேஷத: - ப்ரபத்தியை ப்ரதானமாகவும் ஸ்வதந்த்ரமாகவும் கைக்கொண்டவர்களுக்கு ஸித்தோபாயமான எம்பெருமானிடம் மட்டுமே ஆழ்ந்த நிஷ்டை என்பது கூறப்பட்டது; ஏன் என்றால், ப்ரபத்தியைக் கைக்கொண்ட அந்த நொடியிலேயே தங்களது முயற்சி என்பது அழிகிறது என்பதை உணர்த்தவே ஆகும். அதோ யதர்த்தம் ஸ்வபர: ஸித்தோபாயே நிவேசித: ததர்த்தம் சாந்தயத்ந: அஸௌ ஸித்தோபாயம் ப்ரதீக்ஷதே – எந்த ஒரு மோக்ஷம் என்பதற்காக தனது பாரமானது ஸித்தோபாயமான ஸர்வேச்வரனிடம் சமர்ப்பணம் செய்யப்பட்டதோ, அந்த மோக்ஷம் என்ற பலனுக்காக ஜீவன் வேறு முயற்சிகள் செய்யாதவனாக, ஸித்தோபாயமான ஸர்வேச்வரனையே எதிர்பார்த்தபடி உள்ளான். ப்ரபத்தேர்லக்ஷணே மந்த்ரே விதௌ வாக்யாந்தரேஷு ச பாஷ்யாதௌ ஸம்ப்ரதாயே சோபாயத்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் – ப்ரபத்தி மந்த்ர வாக்யத்திலும், த்வய மந்த்ரத்திலும், சரம ச்லோகத்திலும், ப்ரபத்தியை விதிக்கின்ற மற்ற வாக்கியங்களிலும், ஸ்ரீபாஷ்யத்திலும், கீதா பாஷ்யத்திலும், ஸம்ப்ரதாயத்திலும் ப்ரஹ்மத்திடமே உபாயமாக உள்ள தன்மை உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. பூர்வஸித்தஸ்ய தேசாதே: தர்மத்வம் யத்விதிஷ்யதே ஏவம் தத்வவித: ப்ராஹு: க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் – எவ்விதம் திவ்யதேசம் முதலானவைகளுக்கு தர்மம் என்னும் பதத்தின் அர்த்தமாக உள்ள நிலை ஏற்கப்படுகிறதோ, அது போன்றே உள்ளது உள்ளபடி அறிந்தவர்களால் க்ருஷ்ணனே அநாதியாக உள்ள தர்மம் என்று கூறப்படுகிறது.