Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 31)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
பெரியபிராட்டியுடன் கூடியுள்ள எம்பெருமானே உபாயமாக உள்ளான்
மூலம் – இங்கு கேவல தர்க்கங்களையிட்டு ப்ரமாணங்களை பாதிக்கலாகாதென்னுமிடம் முன்பே சொன்னோம். ஆகையால் யதாப்ரமாணம் சரண்யாபிப்ராய விசேஷாநுகுணமாக விசிஷ்டம் உபேயமானாற்போலே விசிஷ்டம் உபாயமாகக் குறையில்லை.
– சாதாரணமாக உள்ள தர்க்கவாதங்கள் மூலமாக உறுதியான ப்ரமாணங்களைத் தகர்க்க இயலாது, அவ்விதம் செய்தலும் கூடாது என்பதை நாம் முன்னரே உரைத்தோம். ஆகவே எந்த ப்ரமாணங்கள் மூலமாக ஸர்வேச்வரனின் விருப்பத்திற்கு ஏற்றபடி, பிராட்டியுடன் கூடிய எம்பெருமானே உபேயமாக உள்ளான் என்று கூறுகிறோமோ, அதே போன்று பிராட்டியுடன் கூடிய எம்பெருமானே உபாயமாகவும் உள்ளான் என்று கூறுவதில் எந்தவிதமான விரோதமும் இல்லை.