Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 30)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
உபாய தசை மற்றும் பல தசை ஆகியவற்றில் பெரியபிராட்டியின் பணி
மூலம் – பரஸ்வீகார ரஹிதம் ரக்ஷா ஸங்கல்ப வர்ஜிதம் குணாதிகமிஹேஷ்டம் ஹி சரண்யஸ்ய விசேஷணம் ஏகரஸ்யஜுஷோ: சேஷிதம்பத்யோ: ஸர்வகர்மஸு விசேஷண விசேஷ்யத்வம் ச்ருதம் கஸ்மாந்ந ரோசதே ப்ரதர்தநாதிவித்யாஸு வேத்யே அபி பரமாத்மநி அசேதநவதிச்சாம: சேதநம் ச விசேஷணம் இத்தம் ப்ரபத்திவித்யாயாம் தத்தந்மந்த்ராநுஸாரத: விபு: பத்ந்யா குணாத்யைச்ச விதிஷ்டோ விஷய: அத்ர ந:
– (மேலே உள்ள ச்லோகங்களின் பொருள்) பரஸ்வீகார ரஹிதம் ரக்ஷா ஸங்கல்ப வர்ஜிதம்குணாதிகமிஹேஷ்டம் ஹி சரண்யஸ்ய விசேஷணம் – (த்வயத்தின் முதல் வரியில் மஹாலக்ஷ்மியை நாராயணனிடமிருந்து பிரிக்க இயலாத விசேஷணமாக்க் கொள்ளாதவர்களைப் பார்த்து உரைக்கிறார்) அவனுடைய காப்பாற்றும் தன்மை போன்ற பலவும் காப்பாற்றுவதற்கான பொறுப்பை ஏற்கத் தகுதி இல்லாதவை என்றும், அவற்றுக்குக் காக்கவேண்டும் என்ற ஸங்கல்பம் என்பது இல்லை என்றும் உணர்ந்தபோதிலும், அவற்றை (அதாவது இது போன்ற தகுதியும், ஸங்கல்பமும் அவனுக்கு மட்டுமே உள்ளன) அவனுடைய உபலக்ஷணங்களாகக் கொள்ளாமல் அவனுடைய விசேஷணமாகக் கொள்ளுவதில் நீங்கள் விருப்பம் கொள்கிறீர்களே! ஏகரஸ்யஜுஷோ: சேஷிதம்பத்யோ: ஸர்வகர்மஸு விசேஷண விசேஷ்யத்வம் ச்ருதம் கஸ்மாந்ந ரோசதே – ஸ்ருஷ்டி உள்ளிட்ட அனைத்துவிதமான செயல்பாடுகளிலும் ஒரே போன்ற மகிழ்வை அடைகின்றவர்களும், அனைத்திற்கும் எஜமானர்களும் ஆகிய திவ்யதம்பதிகள், சாஸ்த்ரங்களின் அடிப்படையில் ஒருவர் விசேஷணமாகவும் (பிரிக்க இயலாத தன்மை), ஒருவர் அந்த விசேஷணத்தைக் கொண்ட விசேஷ்யமாகவும் கூறப்பட்டுள்ளனர். இப்படியாக இவர்கள் உள்ள நிலை என்பது எந்தக் காரணத்தால் உங்களுக்கு ஏற்கும்படி இல்லை? ப்ரதர்தநாதிவித்யாஸு வேத்யே அபி பரமாத்மநி அசேதநவதிச்சாம: சேதநம் ச விசேஷணம் – ப்ரதர்த்தந வித்யை போன்ற பலவற்றிலும் பரமாத்மாவே முதன்மையானவனாக ஏற்கப்படுகின்றபோதிலும், அசேதன வஸ்துக்கள் போன்றே சேதனமாக உள்ள இந்த்ரன் உள்ளிட்டவர்களையும் அந்தப் பரமாத்மாவின் விசேஷணங்களாக ஏற்கிறோம். இத்தம் ப்ரபத்திவித்யாயாம் தத்தந்மந்த்ராநுஸாரத: விபு: பத்ந்யா குணாத்யைச்ச விதிஷ்டோ விஷய: அத்ர ந: - இது போன்றே இந்த ப்ரபத்தி என்னும் வித்யையில், த்வயம் உள்ளிட்ட மந்த்ரங்களில் கூறப்பட்டபடி, தன்னுடைய பத்னியாகிய பெரியபிராட்டியுடனும், தனது குணங்கள் மற்றும் திருமேனி ஆகியவற்றுடனும் கூடியவனான எம்பெருமானே நமக்கு விஷயமாக உள்ளான்.