Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 29)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
உபாய தசை மற்றும் பல தசை ஆகியவற்றில் பெரியபிராட்டியின் பணி
மூலம்– பட்டரும், ஐச்வர்யம்அக்ஷரகதிம்பரமம்பதம்வா கஸ்மைசித்அஞ்ஜலிபரம்வஹதேவிதீர்ய அஸ்மைநகிஞ்சித்உசிதம்க்ருதம்இதிஅதஅம்ப த்வம்லஜ்ஜஸேகதயக: அயம்உதாரபாவ: என்று ச்ருதியில் உதாரசப்தத்துக்கு வ்யாக்யாநம் பண்ணினார். ஸ்ரீஸூக்தபாஷ்யத்தில் பெரியஜீயரும் அபேக்ஷிதார்த்தங்களெல்லாம் உபபாதித்தார். இப்படி ச்ருதி ஸ்ம்ருதி ஸம்ப்ரதாயம் நிற்கிற நிலைகளைக் கொண்டு ஸ்ரீமச்சப்தத்தில் சொன்ன விசேஷணத்துக்கு விக்ரஹாதிகளுக்குப்போலே வஸ்த்வநுரூபமான உபயோக விசேஷங்களை ஸஹ்ருதயர் அறிந்து கொள்வது.
–தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய். இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே! நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய். இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக. இப்படியாக உள்ள பலவிதமான அர்த்தங்களை பெரியஜீயர் எனப்படும் நாராயணமுனியாகிய நஞ்ஜீயர் தனது ஸ்ரீஸூக்த பாஷ்யத்தில் அருளிச்செய்தார். ஆகவே ச்ருதி, ஸ்ம்ருதி மற்றும் ஸம்ப்ரதாயங்கள் மூலமாக அறியப்படுவது என்னவென்றால் திவ்யமங்கள விக்ரஹங்களின் பயன் எப்படியாக உள்ளதோ அதே போன்று த்வயத்தில் காணப்படும் ஸ்ரீமத் என்னும் பதத்தின் பயனும், அதன் தன்மைக்கு ஏற்றபடி உள்ளது என்பதாகும். இதனை உள்ளது உள்ளபடி அறியக்கூடியவர்கள் அறிவார்கள்.
– ச்ருதியில் உள்ளதான ஸ்ரீஸூக்தத்தில் (5) காணப்படும் “உதார” என்னும் பதத்திற்கான விளக்கத்தை, ஸ்வாமி பராசரபட்டர் ஸ்ரீகுணரத்னகோசத்தில் (58) பின்வருமாறு அருளிச்செய்தார்: ஐச்வர்யம்அக்ஷரகதிம்பரமம்பதம்வா கஸ்மைசித்அஞ்ஜலிபரம்வஹதேவிதீர்ய அஸ்மைநகிஞ்சித்உசிதம்க்ருதம்இதிஅதஅம்ப த்வம்லஜ்ஜஸேகதயக: அயம்உதாரபாவ: