Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 28)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

உபாய தசை மற்றும் பல தசை ஆகியவற்றில் பெரியபிராட்டியின் பணி

மூலம்– ஸ்ரீய:பதி தானும் யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்தரம் ஹி குணோததிம் நிஸ்தரந்த்யசிரேணைவ வ்யக்த த்யாநபராயணா: என்று ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதையிலே ஸ்ரீபதிரூப த்யாநத்திலே அருளிச்செய்தான். தத்பரங்களான சாஸ்த்ரங்கள் நிற்க, இம்மத்யஸ்த சாஸ்த்ரங்கள் அதிப்ரபலங்கள். ஆளவந்தாரும் ஜகத்ஸமஸ்தம் யதபாங்கஸம்ச்ரயம் என்றும், ச்ரேயோ ந ஹி அரவிந்தலோசனமந: காந்தா ப்ரஸாதாத்யதே ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத்வஸு ந்ருணாம் ஸம்பாவ்யதே கஹிசித் என்றும் அருளிச்செய்தார். ஸ்ரீபாஷ்யகாரரும் ஸ்ரீவைகுண்டகத்யத்தில் சேஷசேஷாசநாதிகம் ஸர்வம் பரிஜநம் பகவத: தத்ததவஸ்தோசித பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா என்று பகவத்கைங்கர்யரூப பரமபருஷார்த்தம் இவள் நியோகத்தின்படியே நடத்த வேணுமென்று அருளிச்செய்தார். கூரத்தாழ்வானும், ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாதசேஷ ஜகதாம் ஸர்கோபஸர்கஸ்திதீ: ஸ்வர்கம் துர்கதிமாபவர்கிகபதம் ஸர்வம் ச குர்வந் ஹரி: யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம் க்ரீடேயம் கலு நாந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாதைகரஸ்யாத்தயா என்று ஸங்க்ரஹித்த அர்த்தத்தை தேவி த்வந்மஹிமாவர்த்திந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே என்று தொடங்கி விஸ்தரித்தார்.

அனைத்து உலகங்களின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்தபடியும்; ஸ்வர்க்கம், நரகம், பரமபதம் ஆகியவற்றைப் போன்ற அனைத்தையும் செய்தபடியும் இருக்கின்ற ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியாரின் அழகான திருமுகத்தை பார்த்தபடி நின்று, அவளது புருவநெறிப்பு முதலான முக பாவங்களுக்கு அடங்கியவனாக அனைத்தையும் செய்கிறான்.இவ்விதம் அவளது குறிப்பிற்கு ஏற்றபடி இவன் செல்லாவிடில் இவனுக்கு இந்த ஸ்ருஷ்டி முதலான லீலைகள், ஆனந்தத்தை அளிக்காமல் வீணாகிவிடும் அல்லவோ?இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியார் அனைத்து நன்மைகளையும் அளிக்கக் கடவாளாக. இப்படியாக மிகவும் சுருக்கமாக அருளிச்செய்த விஷயத்தை, பின்னர் ஸ்ரீஸ்தவம் (8) - தேவி த்வந்மஹிமாவர்த்திந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே - ஹே! ஸ்ரீரங்கநாச்சியாரே! உன்னுடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீரங்கநாதனாலும் அறியப்படுவதில்லை. உன்னாலும் உனது மேன்மை என்பது எத்தன்மையது என்று அறியப்படுவதில்லை - என்று விரிவாக உரைத்தார்.

– ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதையில் உள்ள ஸ்ரீபதிரூப த்யான பகுதியில் ஸர்வேச்வரன், யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்தரம் ஹி குணோததிம் நிஸ்தரந்த்யசிரேணைவ வ்யக்த த்யாநபராயணா: - ஸர்வேச்வரனின் திருமேனியை எப்போதும் த்யானித்தபடி உள்ளனரோ அவர்கள் எந்த மஹாலக்ஷ்மியை ப்ரபத்தி செய்து, எளிதாகக் கரையேற இயலாத மூன்று குணங்களால் உண்டான இந்த ஸம்ஸாரம் என்னும் கடலை, எந்தவிதமான சிரமமும் இல்லாமல், விரைவாகக் கடக்கின்றார்களோ – என்றான். மஹாலக்ஷ்மியைப் பற்றி மட்டுமே உரைக்கின்ற சாஸ்த்ரங்களைக் காட்டிலும், நடுநிலையாக அனைத்தைப் பற்றியும் கூறுகின்ற சாஸ்த்ரங்களில் இவளைப் பற்றி உரைப்பது மிகவும் ப்ரஸித்தம் ஆகும். ஸ்வாமி ஆளவந்தார் கீழே உள்ளபடி அருளிச்செய்தார்: ஸ்தோத்ரரத்னம் (27) - ஜகத்ஸமஸ்தம் யதபாங்கஸம்ச்ரயம் – இந்த உலகம் முழுவதும் எந்த பிராட்டியின் கடைக்கண் பார்வையில் மட்டுமே தனது ஆதாரத்தைக் கொண்டுள்ளதோ. சது:ச்லோகி - ச்ரேயோ ந ஹி அரவிந்தலோசனமந: காந்தா ப்ரஸாதாத்யதே ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத்வஸு ந்ருணாம் ஸம்பாவ்யதே கஹிசித் – தாமரை போன்ற அழகான திருக்கண்களைக் கொண்டவனாகிய ஸர்வேச்வரனின் மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளவளான பெரியபிராட்டியின் கருணை இல்லாமல் ஜீவாத்மா பற்றிய அனுபவம், ஸர்வேச்வரன் பற்றிய அனுபவம் போன்ற எதுவும் நமக்கு உண்டாகாது. ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீவைகுண்டகத்யத்தில் - சேஷசேஷாசநாதிகம் ஸர்வம் பரிஜநம் பகவத: தத்ததவஸ்தோசித பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா – ஆதிசேஷன், விஷ்வக்ஸேநர் உள்ளிட்ட அனைவரையும், ஸர்வேச்வரனுக்குத் தேவையான அந்தந்த காலகட்டங்களிலும் நிலைகளிலும் ஏற்ற கைங்கர்யங்களைச் செய்யும்படியாக நியமிக்கின்ற மஹாலக்ஷ்மியுடன் உள்ள – என்று உரைத்தார். இதன் மூலம் பகவத் கைங்கர்யம் என்பதான மிகவும் உயர்ந்த புருஷார்த்தமானது பெரியபிராட்டியின் கட்டளைக்கு ஏற்பவே நடக்கவேண்டும் என்றார். ஸ்வாமி கூரத்தாழ்வான் ஸ்ரீஸ்தவத்தில் கீழே உள்ளபடி அருளிச்செய்தார்: ஸ்வஸ்தி ஸ்ரீ: திசதாத் அசேஷ ஜகதாம் ஸர்க்க உபஸர்க்க ஸ்திதீ: ஸ்வர்க்கம் துர்க்கதிமாபவர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வந் ஹரி: யஸ்யா வீக்ஷ்ய முகம் தத் இங்கித பராதீந: விதத்தே அகிலம் க்ரீடா இயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐகரஸ்யாத் தயா