Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 19)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

சேஷ-சேஷி ஸம்பந்தம் குறித்து உண்டாகும் தவறான கருத்துகளுக்கு விளக்கம்

மூலம்– இப்படி ஈச்வர ஸ்வாதந்த்ர்ய ஸஹஜகாருண்யங்கள் அடியாக வரும் கலக்கங்களுக்குப் பரிஹாரம் சொன்னோம். ஸம்பந்தவிசேஷமடியாக வருங்கலக்கத்துக்குப் பரிஹாரம் சொல்லுகிறோம்.

– இப்படியாக ஸர்வேச்வரனின் எல்லையற்ற சுதந்திரத் தன்மை குறித்தும், அவனுக்கு இயல்பாகவே உள்ள கருணை குறித்தும் உண்டாகும் மயக்கங்களை நீக்கும் கருத்துக்களை உரைத்தோம். இனி அவனுக்கும் ஜீவனுக்கும் இயல்பாகவே உள்ள உறவுமுறை குறித்து உண்டாகும் மயக்கங்களை நீக்கும் கருத்துக்களை உரைப்போம்.