Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 17)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ப்ரபத்தி என்பது அதிகாரி விசேஷணம் என்பதற்கான மறுப்பு
மூலம் – ஓர் அதிகாரி விசேஷத்துக்குக் கர்த்தவ்யமாக “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று விதிக்கப்படுகிற ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமென்று சிலர் சொன்னவிடம், அதிகாரி விசேஷணத்துக்குச் சொல்லும் லக்ஷணத்தோடு சேராமையாலே அதிவாதம். இங்ஙனல்லாதபோது ஈச்வரன் உபாயமாய் நிற்க உபாஸநாதி சாஸ்த்ரார்த்தங்களும் அதிகாரி விசேஷணங்களாம்.
– ப்ரபத்தி என்பது கீதையில் (18-66) - மாமேகம் சரணம் வ்ரஜ – என்னை மட்டுமே சரணம் என்று அடைவாயாக – என்று தெளிவாக விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் இத்தகைய ப்ரபத்தி என்பது இது போன்று விதிக்கப்படுவது அல்ல, அது அந்தந்த அதிகாரியின் தன்மைக்கு உட்பட்டது ஆகும் என்று கூறுகின்றனர். இது சாஸ்த்ரங்களுக்கு அடங்காத வாதமாகும். எப்படி? இது அதிகாரி விசேஷணத்துக்கு உரைக்கபடும் லக்ஷணத்துடன் சேராத காரணத்தால் ஆகும் (இதனைப் புரிந்து கொள்வோம். வேதங்களில் – ஸ்வர்க்க காமோ யஜேத – ஸ்வர்க்கம் விரும்புகிறவன் யாகம் செய்யக்கடவன் – என்று உள்ளது. அதாவது ”ஸ்வர்க்கம் விரும்புதல்” என்பது அந்த அதிகாரிக்கு முன்னரே உள்ள தன்மையாக இருப்பதால், “யாகம் இயற்றவேண்டும்” என்று விதிக்கப்படுகிறது. ஆனால் ப்ரபத்தி என்பது இது போன்ற விதியைக் கேட்ட பின்னரே கைக்கொள்ளபடுவதால், இதனை அதிகாரியின் தன்மையாகக் கொள்ள இயலாது). இவ்விதம் கொள்ளவில்லை என்றால், உபாயமாக ஈச்வரன் உள்ளபோது, உபாஸனை குறித்துக் கூறும் சாஸ்த்ரங்கள் அனைத்தும் செயல்களை விளக்கவில்லை, அவை அதிகாரிகளின் விசேஷணங்கள் என்றே ஆகிவிடும்.