Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 16)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

ஸித்தோபாயம், ஸாத்யோபாயம்

மூலம் – இப்படிப்பட்ட க்ருபாவிசிஷ்டனான ஈச்வரன் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் என்கிறபடியே ஸித்தோபாயம். இவனுக்கு ப்ரஸாதங்களான பக்தி ப்ரபத்திகள் ஸாத்யோபாயங்கள்.

– மேலே கூறப்பட்ட கருணை நிரம்பிய ஈச்வரனே, மஹாபாரதம் வனபர்வம் (71-123) - க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்- க்ருஷ்ணனே எப்போதும் உள்ள தர்மம் (உபாயம்) – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸித்தோபாயமாக உள்ளான். ப்ரபந்நன் ஒருவனை எப்போது மகிழும்படிச் செய்யவல்ல பக்தி, ப்ரபத்தி போன்றவை ஸாத்யோபாயங்கள் ஆகும்.