Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 14)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
அவதாரங்களின்போது ஈச்வரனுக்குத் துக்கங்கள் பற்றிக் கூறுவதன் பொருள்
மூலம்– இப்படியாகையாலேஅவதாரதசையிலும் வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித: என்றிப்புடையிற்சொல்லுமவையெல்லாம் அநுக்ரஹ விஷயமாய் இருப்பார் சிலரை ரஞ்ஜிப்பிக்கைக்கும் அஸுர ப்ரக்ருதிகளை மோஹிப்பிக்கைக்குமாக வத்தனை. இவ்வர்த்தத்தை காலஸ்ய ஹி ச ம்ருத்யோச்ச ஜங்கம ஸ்தாவரஸ்ய ச ஈசதே பகவாநேக: ஸத்யமேதத் ப்ரவீமி தே ஈசந்நபி மஹாயோகீ ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு: கர்மாண்யாரபதே கர்த்தும் கீநாச இவ துர்பல: தேந வஞ்சயதே லோகாந் மாயாயோகேந கேசவ: யே தமேவ ப்ரபத்யந்தே ந தே முஹ்யாந்தி மாநவா: க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந: மோஹயித்வா ஜகத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம் மநுஷ்ய தேஹிநாம் சேஷ்டாமித்யேவமநுவர்த்ததே லீலா ஜகத்பதே: தஸ்ய சந்தத: ஸம்ப்ரவர்த்ததே இத்யாதிகளில் மஹர்ஷிகள் அறுதியிட்டார்கள். ஆகையால் அவதார வ்ருத்தாந்தங்களிலும் துக்காபிநயமாத்ரமேயுள்ளது. அது தானும் க்ருபாமூலம். இது ஸ்வதந்த்ரனான தனக்கு லீலையுமாயிருக்கும். கூனர் குறளரைக் கொண்டாடி ரக்ஷிக்கை நிரபேக்ஷரான ராஜாக்களுக்கு நிலையுமாய் க்ருபாகார்யமுமாய்க் காணாநின்றோமிறே. இப்படியாகையாலேயிறே உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமநாத்யை: சிதசிதௌ ஸ்வமுத்திச்ய ஸ்ரீமாந் என்றது. இப்படி பரஹித வ்யாபாராச்ரயமாகையாலே ஆச்ரிதர்க்கு ரக்ஷகனுமாய் உபாயாந்தர ஸ்தாநநிவேசத்தாலே உபாயமுமாயிருக்கும். ரக்ஷண வ்யாபார பலாச்ரயமாகையாலே சேஷியுமாய் அதடியாக ப்ராப்யனுமாயிருக்கும். இப்படியிருக்கை இவனுக்கு ஸ்வரூப ப்ரயுக்தமென்று தர்மிக்ராஹக ப்ரமாணஸித்தம். இப்படி ரக்ஷகனான ஈச்வரனுக்கு ப்ரதானமான ஞான சக்தி கருணைகளில் ஞான சக்திகள் நிக்ரஹாநுக்ரஹ ஸாதாரணங்கள். காருண்யம் அநுக்ரஹத்துக்கு அஸாதாரணம்.
– காலம், ம்ருத்யு, அசையும் மற்றும் அசையாப் பொருள்களை பகவான் மட்டுமே நியமனம் செய்கிறான். இதனை நான் உனக்கு உண்மையாக உரைக்கிறேன். அனைத்திற்கும் பிரபுவாகவும், வியப்பான ஞானம் மற்றும் சக்திகளைக் கொண்டவனாகவும், அனைத்தையும் நியமிப்பவனாகவும் இருந்தாலும் சாதாரண ஒரு மனிதன் மோன்று தேவையற்ற கர்மங்களைச் செய்கிறான் (தேர் ஓட்டுதல், தூது செல்லுதல்). இதன் மூலமாக உலகில் உள்ளவர்களுக்கு “தான் ஒரு சாதாரணமானவன்” என்னும் மயக்கம் தோன்றும்படி வஞ்சிக்கிறான். ஆனால் யார் அவனைச் சரணம் அடைகின்றனரோ, அவர்கள் இந்த மயக்கத்தில் ஆழ்வதில்லை. மஹாபாரதம் மௌஸலபர்வம் (9-34) - க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந: மோஹயித்வா ஜகத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம் – நீண்ட அழகான திருக்கண்களைக் கொண்ட க்ருஷ்ணன் இந்த உலகின் பாரத்தை இறக்கினான். பின்னர் உலகமே மயங்கும்படியாகச் செய்து, மிகவும் உயர்ந்த தனது இடத்தை மீண்டும் அடைந்தான். விஷ்ணுபுராணம் (5-22-18) - மநுஷ்ய தேஹிநாம் சேஷ்டாமித்யேவமநுவர்த்ததே லீலா ஜகத்பதே: தஸ்ய சந்தத: ஸம்ப்ரவர்த்ததே – இப்படியாக அவன் மனிதர்களின் செயல்களைக் கடைபிடிக்கிறான். உலகின் அதிபதியான அவனது இப்படிப்பட்ட லீலைகள் அனைத்தும் அவனுடைய ஸங்கல்பத்தாலேயே உண்டாகின்றன. இப்படியாக அவனது அவதாரங்களின்போது துக்கப்படுவதாக காண்பித்துக் கொள்ளுதல் என்பது ஓர் அபிநயம் (லீலை) என்றே உள்ளது. இதற்கும் அவனது க்ருபையே மூலமாக உள்ளது. இது சுதந்திரமாக உள்ள அவனுக்கும் லீலையாக உள்ளது. ஒரு சில அரசர்கள் எந்தவிதமான ப்ரதிபலனையும் எதிர்பாராமல் கூனர்களையும், குள்ளர்களையும் தங்களது பாதுகாப்பில் பத்திரமாக வைத்துள்ளதைக் காண்கிறோம் அல்லவோ? இது அந்த அரசர்களுக்கு பொழுதுபோக்கு மட்டும் அல்ல, கருணையின் வெளிப்பாட்டினால் ஆகும். இதனால் அல்லவோ ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (2-87) ஸ்வாமி பராசரபட்டர் - உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமநாத்யை: சிதசிதௌ ஸ்வமுத்திச்ய ஸ்ரீமாந் – ஒரு பொருளை ஒரு பொருளாகப் படைத்தல், இப்படியாக உண்டான அந்தப் பொருள் நிலையாக உள்ளபடி செய்தல், அதனை நியமித்தல் போன்ற செயல்களைத் தனது லீலைக்காகவே செய்கிறான் என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன – என்று அருளிச்செய்தார். இப்படியாக ஸர்வேச்வரன் மற்றவர்களுக்கு நன்மைகளை அளிக்கின்ற அனைத்து செயல்களுக்கும் இருப்பிடமாக உள்ளதால், தன்னை அண்டியவர்களுக்கு ரக்ஷகனாக உள்ளான்; தன்னை உபாயம் என்னும் ஸ்தானத்தில் நிலைநிறுத்திக் கொள்வதால், உபாயமும் அவனே ஆகிறான். இப்படியாகத் தன்னை அண்டியவர்களைக் காப்பது என்னும் செயல்களால் உண்டான மகிழ்வை அவன் அடைவதால், அவனே எஜமானனாகவும், அடையப்படும் இலக்காகவும் உள்ளான். இப்படியாக இவன் இருத்தல் என்பது இவனுக்கு இயல்பாகவே உள்ள தன்மை என்பதை ப்ரப்ரஹ்மத்தை விளக்குகின்ற சாஸ்த்ரங்கள் மூலமாக நாம் அறியலாம்.
– இராமாயணம் அயோத்யாகாண்டம் (2-40) - வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித: - மனிதர்களின் துன்பங்களைக் காணும் இராமன் மிகுந்த துக்கம் அடைகிறான் – போன்ற வரிகள் காண்க. இது போன்ற வரிகள் அவனுடைய கருணைக்கு இலக்காகத் தகுதி பெற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கவே ஆகும். மேலும் இப்படியாக அவன் துக்கப்படுவதாகக் கூறப்படுவது அசுரர்களை ஒத்த குணங்கள் கொண்டவர்கள், “அவன் ஈச்வரனின் அவதாரம் அல்ல, சாதாரண மனிதனே” என்னும் மயக்கத்தில் முழுகுவதற்காக ஆகும். இதனைக் கீழே உள்ள பல வரிகள் மூலமாக மஹரிஷிகள் கூறுகின்றனர்: மஹாபாரதம் உத்யோகபர்வம் (67 – 13, 14, 15) : காலஸ்ய ஹி ச ம்ருத்யோச்ச ஜங்கம ஸ்தாவரஸ்ய ச ஈசதே பகவாநேக: ஸத்யமேதத் ப்ரவீமி தே ஈசந்நபி மஹாயோகீ ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு: கர்மாண்யாரபதே கர்த்தும் கீநாச இவ துர்பல: தேந வஞ்சயதே லோகாந் மாயாயோகேந கேசவ: யே தமேவ ப்ரபத்யந்தே ந தே முஹ்யாந்தி மாநவா: