Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 13)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ஸ்வாதந்த்ர்யம் மற்றும் காருண்யம் ஒன்றாவதால் நன்மை
மூலம் – நிஷ்க்ருபனுடைய ஸ்வாதந்த்ர்யம் பாதகம். அஸ்வதந்த்ர்யனுடைய காருண்யம் பரர்க்கும் அநுபகாரகமாய்த் தனக்கும் க்லேசாவஹமாயிருக்கும். ஸ்வதந்த்ரனுடைய காருண்யம் நினைத்து முடிக்கையாலே தனக்கும் அதிரஸமாய் ஆச்ரயிப்பார்க்கெல்லாம் அன்றே அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்த்திக்கும் உடலாயிருக்கும்.
– க்ருபை என்பதே இல்லாமல் இருக்கின்ற ஒருவனது சுதந்திரம் என்பது தீமையை மட்டுமே அளிக்கும். சுதந்திரம் இல்லாதவன் ஒருவனுடைய காருண்யம் என்பது மற்றவர்களுக்கும் உதவாமல், அவனுக்கும் துன்பத்தை அளிப்பதாகவே இருக்கும். ஆனால் சுதந்திரத்துடன் கூடிய ஒருவனது காருண்யம் என்பது அவன் எதனைச் செய்யவேண்டும் என்று எண்ணுகிறானோ அதனைச் செய்து முடிக்க வல்லதாக உள்ளதால் - அவனுக்கும் இன்பதை அளித்து, அவனை அண்டியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும், அவர்களுக்கு விருப்பம் அல்லாதவற்றை விலக்குவதாகவும் உள்ளதற்குக் காரணமாக இருக்கும்.