Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 7)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

மேலே கூறப்பட்டவர்களின் நட்பை விடவேண்டியதன் அவசியம்

மூலம் - இந்த ஹைதுகரோட்டை ஸம்பாஷணம் மாயயா அபஹ்ருதஜ்ஞாநா: என்கிறபடியே கண்டு மதிகெட்டானாகி சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ச்ருதா: என்று ஈச்வரன் நம்முடையவர்களென்னும் நாலு வகையிலும் கூடாதே “அளியன் நம் பையல்” என்னாதபடி பண்ணி ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே என்கிற பகவதபிமான பாஹ்யவர்கத்திலே கோப்புண்ணப் பண்ணும்.

– இத்தகைய ஹைதுகர்களுடன் ஒருவன் செய்கின்ற வாதங்களோ அல்லது பேச்சுக்களோ கீதை (7-15) - மாயயா அபஹ்ருதஜ்ஞாநா: - மாயை மூலம் ஞானம் அழிக்கப்பட்டவர்கள் - என்னும்படி ஒருவனது புத்தியைக் கெடுப்பதாகும். மேலும் மஹாபாரதம் சாந்திபர்வம் (350-33) - சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ச்ருதா: - என்னுடைய பக்தர்கள் நான்குவகை ஆவர் – என்று ஈச்வரனால் “இவர்கள் என்னுடையவர்கள்” என்று கொண்டாடப்படும் நான்கு வகையில் அடங்காமல் ஆகிவிடுகின்றனர். மேலும், திருமாலையில் (37) – அளியன் நம் பையல் –இரக்கப்படவேண்டியவன் – என்று ஸ்ரீரங்கநாதனால் ஏற்கப்படாமல் போகின்றனர். இது தவிர கீதை (7-15) - ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே – அவர்கள் என்னிடம் ப்ரபத்தி செய்து, என்னை வணங்குவதில்லை – என்னும் நிலைக்கு ஆளாகின்றனர். இப்படியாக அவர்கள் அந்த கூடாநட்பானது எம்பெருமானின் ப்ரியமான நிலையிலிருந்து விலக்கி, எம்பெருமானின் ப்ரியத்துக்கு ஆளாகாதவர்களின் வட்டத்தில் சேர்த்துவிடும்.