Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 5)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ஈச்வரனின் ”தண்டிக்கவேண்டும்” என்ற எண்ணம் நீங்க மூன்று காரணங்கள்
மூலம்– ஆர்ஷம் தர்மோபதேசம் ச வேதசாஸ்த்ராவிரோதிநா யஸ்தர்கேணாநுஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: என்கிறபடியே இவ்வர்த்தங்களை ஸமீசீந தர்க்கங்களாலே தெளியாதவர்கள் காணாத சாக்ய பாஷண்டை: த்ரயீதர்மோ விலோபித: என்கிறபடியே, ஹைதுகராய் வேதவிரோதி தர்க்கங்களையிட்டு ப்ராமாணிகார்த்தங்களை அபஹரிப்பவர்கள். இவ்வபஹாரம் விபூதியையும் விபூதிமானையும் பற்ற இரண்டு வகையாயிருக்கும். அதில் விபூதிமானை அபஹரிக்கையாவது – (1) ச்ரிய:பதியான ஸர்வேச்வரனை இல்லையென்னுதல், (2) வேறொருத்தனை ஈச்வரனாகக் கட்டி ஸர்வேச்வரனை விபூதி கோடியிலே வைத்தல் செய்கை. விபூதியை அபஹரிக்கையாவது – (1) விபூதியை ஒரு முகத்தாலே இல்லையென்னுதல், (2) உண்டாக்கி ஈச்வரனோடு ஸம்பந்தமறுத்து ஸ்வதந்த்ரமென்னுதல், (3) பரதந்த்ரமாக்கி தன்னோடு பிறரோடு புணைப்புதல் செய்கை.
– மநுஸ்ம்ருதி (12-106) - ஆர்ஷம் தர்மோபதேசம் ச வேதசாஸ்த்ராவிரோதிநா யஸ்தர்கேணாநுஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: - வேதங்களில் கூறப்பட்ட பொருளையும், தர்ம சாஸ்த்ரங்களையும் வேதங்களாகிய சாஸ்த்ரத்திற்கு விரோதம் ஏற்படாத வகையில் யார் அறிந்துகொள்கிறானோ அவனே தர்மம் அறிந்தவன், இவ்விதம் உணராதவன் தர்மம் அறியாதவன் – என்றது காண்க. ஒரு சிலர் தர்மங்களின் அர்த்தங்களை சரியான கருத்துடன் அறியாமல் இருக்கக்கூடும். இவர்கள் அத்ரிஸ்ம்ருதி - காணாத சாக்ய பாஷண்டை: த்ரயீதர்மோ விலோபித: - காணாதர் (வைசேஷிகர்கள்), பௌத்தர்கள் மற்றும் பாஷாண்டிகள் மூலமாக வேதங்களில் உரைக்கப்படும் தர்மங்கள் மறைக்கப்படுகின்றன –என்று கூறுவது போன்று, வேதங்களுக்கு விபரீதமான பொருளைக் கற்பித்து, அவற்றின் உண்மையான அர்த்தங்களை தங்களது முரணான வாதங்களால் மறுப்பர். இப்படியாக மறுக்கின்றவர்கள் இருவிதமாக மறுப்பர். அவையாவன – விபூதியையும், அந்த விபூதியையுடைய எம்பெருமானையும் ஆகும். இவற்றில் விபூதியை உடைய ஸர்வேச்வரனைத் தள்ளுவது என்பது கீழே உள்ள விதங்களில் ஆகும்: பெரியபிராட்டியின் நாயகனான ஸர்வேச்வரனை ”இல்லை” என்று கூறுதல். வேறு ஒருவனை ஸர்வேச்வரன் என்று அனைவருக்கும் உபதேசித்து, உண்மையான ஸர்வேச்வரனை ஒதுக்கிவைத்தல். விபூதியைத் தள்ளுவது என்பது கீழே உள்ள விதங்களில் ஆகும்: விபூதியே இல்லை என்று கூறுதல். விபூதியை உள்ளது என்று ஒப்புக்கொண்டு, ஆனால் ஈச்வரனுடன் தனக்குத் தொடர்பு இல்லை என்று கூறி, தன்னைச் சுதந்திரமானவன் என்னுதல். தன்னை மற்றவர்களுக்கு வசப்படும்படியாக செய்து கொள்கை.