Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 1)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

யுகபத் அகிலம் ப்ரத்யக்ஷேண ஸ்வத: ஸததம் விதந் நிரவதி தயா திவ்ய உதந்வாந் அசக்ய விவர்ஜித: ஜலதி ஸுதயா ஸார்தம் தேவோ ஜகத்பரிபாலயந் பரமபுருஷ: ஸித்தோபாய: ப்ரதீஷ்டபர: ஸதாம்

– அனைத்தையும் ஒரே நேரத்தில் ப்ரத்யக்ஷமாக, யாருடைய உதவியும் இன்றி தானாகவே எப்போதும் அறிந்தபடி உள்ளவன்; எல்லை காண இயலாத தயை என்னும் குணத்திற்கு தனது இயல்பாகவே ஸமுத்திரம் போன்று உள்ளவன்; இந்த உலகின் ஸ்ருஷ்டி போன்ற பலவற்றையும் செய்பவன்; பரமபுருஷன்; திருப்பாற்கடலில் தோன்றியவளாகிய பெரியபிராட்டியாருடன் இருந்தபடி இந்த உலகைக் காப்பவன்; சரியான மார்க்கத்தில் நடப்பவர்களைப் பாதுகாப்பது என்னும் பொறுப்பை ஏற்றவன் - இப்படிப்பட்ட எம்பெருமான் ப்ரபந்நர்களின் ஸித்தோபாயமாக உள்ளான்.