Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 21)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
ஒன்று முதல் இருபத்திரண்டு அதிகாரம் வரை கூறப்பட்ட விஷயத்தின் ஸாரத்தை உணர்த்தும் ச்லோகம்
ஸந்த்ருஷ்ட: ஸாரவாக்வித் ஸ்வ பர நிசித தீ: ஸங்கஜித் நைகஸம்ஸ்த: ஸ்பஷ்ட உபாய: அதிகிந்ந: ஸபரிகர பரந்யாஸ நிஷ்பந்ந க்ருத்ய: ஸ்வ அவஸ்தா அர்ஹம் ஸபர்யாவிதிம் இஹ நியதம் வ்யாகஸம் க்வாபி பிப்ரத் நிர்முக்த ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரக்ருதி அநுபவதி அச்யுதம் நித்யம் ஏக:
– ஓர் அதிகாரியானவன்: எம்பெருமானால் கடாக்ஷிக்கப்பட்டு (முதல் அதிகாரம்); ஸாரமான ரஹஸ்யத்ரயத்தை அறிந்தவனாக (இரண்டாம் அதிகாரம்); சேதனம், அசேதனம் மற்றும் ஈச்வரன் ஆகியவர்கள் பற்றி தெளிவான அறிவு கொண்டவனாக (3, 4, 5 மற்றும் 6 ஆம் அதிகாரங்கள்); உலகியல் இன்பங்களுடைய பற்றுதல்களை வென்றவனாக (ஏழாம் அதிகாரம்); பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகியவற்றைக் கைக்கொண்டவனாக (எட்டாம் அதிகாரம்); உபாயங்கள் பற்றிய தெளிவான ஞானம் கொண்டவனாக (ஒன்பதாம் அதிகாரம்); மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள வலிமை இல்லாமையால் வருத்தம் கொண்டவனாக (பத்தாம் அதிகாரம்); அங்கங்களுடன் கூடியதான பரந்யாஸத்தினால் தனது கார்யம் நிறைவேறப்பட்டவனாக (11, 12, 13) அதிகாரம்); தனது நிஷ்டைக்கு ஏற்றதான (14) கைங்கர்ய விதிமுறைகளை (15, 16), இந்த ஸம்ஸாரநிலையில் உள்ளபோது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டபடியும் (17), அபராதம் ஏதும் இல்லாமலும் (18), ஒரு திவ்யதேசத்தில் இயற்றுபவனாக (19); ஸ்தூலம் மற்றும் ஸூக்ஷ்ம சரீரம் ஆகியவற்றை விட்டவனாக (20, 21); எம்பெருமானை எப்போதும் அனுபவித்தபடி உள்ளான் (22).