Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 20)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
அவிச்ராந்த ச்ரத்தசத கலஹ கல்லோல கலுஷா: மம ஆவிர்பூயாஸு: மநஸி முநி ஸித்தாதி ஸுலபா: மது க்ஷீர ந்யாய ஸ்வகுண விபவ ஆஸஜ்ஜன கநத் மஹாநந்த ப்ரஹ்ம அநுபவ பரிவாஹா பஹுவிதா:
– சற்றும் ஓய்வே இல்லாமல் எம்பெருமானுக்கான பலவிதமான கைங்கர்யங்களை உடனே செய்யவேண்டும் என்று நூற்றுக்கணக்கான ஆசைகள் எழுந்து, அவை ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்ற கலஹங்கள் என்பதான அலைகள் நிறைந்துள்ளதும்; முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களுக்கே எளிதாக கிட்டும்படி உள்ளதும்; பலவிதமாக உள்ளதும்; ஸ்வரூபம், குணம், விபூதி போன்றவற்றின் சேர்க்கை காரணமாக ப்ரகாசம் பெறுகின்றதும்; ஆனந்தமயமானதும்; ப்ரஹ்ம அனுபவம் என்பதன் எல்லையாக உள்ளதும் ஆகிய கைங்கர்யங்கள் எனது மனதில் உண்டாவதாக.