Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 18)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
முக்தன் மீண்டும் திரும்புதல் குறித்த சந்தேகங்களுக்கான விடை
மூலம் – சாஸ்த்ரவச்ய அதிகாரம் கழிகையாலே முக்ததசையில் ஆஜ்ஞாதி லங்கனமில்லை. அவனுகப்பே தனக்கு உகப்பாகையாலே ஈச்வராபிமதத்துக்கு விபரீதமான அநுஷ்டாநமில்லை. ஆகையால் கைங்கர்ய பர்யந்த பரிபூர்ண ப்ரஹ்மாநுபவரூபமான மோக்ஷாக்ய புருஷார்த்தம் மேல் யாவதாத்மபாவியாயிற்று. இவையெல்லாவற்றையும் நினைத்து அநாவ்ருத்தி: சப்தாதநாவ்ருத்தி: சப்தாத் என்று ஸூத்ரகாரரும் அருளிச்செய்தார்.
– முக்த நிலையில் ஒருவனுக்கு சாஸ்த்ரங்கள் விதிப்பதைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போவதால், ”சாஸ்த்ரங்கள் கூறுவதைக் கடைபிடிக்காமல் உள்ளதால் ஸர்வேச்வரனின் ஆணைகளை மீறுதல்” என்னும் நிலை அவனுக்கு உண்டாவதில்லை. எம்பெருமானின் மகிழ்வு என்பதே இவனுடைய மகிழ்வாக உள்ளதால், எம்பெருமானின் விருப்பத்திற்கு மாறாகச் செயலாற்றுதல் என்னும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது. ஆக பரிபூர்ணமான ப்ரஹ்ம அனுபவம் தொடங்கி எம்பெருமானுக்குத் தொடர்ந்து கைங்கர்யம் செய்தபடி இருத்தல் என்பதான மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷம் என்பது அவனுக்கு எப்போதும் உள்ளதாகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் ப்ரஹ்மஸூத்ரத்தை அருளிச்செய்த வ்யாஸபகவான் (4-4-22) - அநாவ்ருத்தி: சப்தாதநாவ்ருத்தி: சப்தாத் – மீண்டும் திரும்புவதில்லை, இப்படியே உபநிஷத் கூறுவதால் – என்றார்.