Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 11)

அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்

முக்தனுக்குப் படைத்தல் போன்றவை இல்லை என்றாலும் ஸாயுஜ்யம் கூறப்படுகிறது

மூலம்– முக்தனுக்கு ஜகத்வ்யாபாரமில்லையேயாகிலும் க்ருஷி பண்ணின பிதாவும் நிர்வ்யாபாரரான புத்ராதிகளும் க்ருஷிபலத்தை பஜிக்குமாப்போலே ஜகத்வ்யாபாரத்தால் வரும் ரஸம் வ்யாபரிக்கிற ஈச்வரனுக்கும் பார்த்திருக்கிற முக்தனுக்கும் துல்யம். ஸூத்ரகாரரும் ஜகத்வ்யாபார வர்ஜம் என்று தொடங்கி போகமாத்ர ஸாம்ய லிங்காச்ச என்று அருளிச்செய்தார். ஸாமரஸ்யம் ஹி ஸாயுஜ்யம் வதந்தி ப்ரஹ்மவதிந: என்று சாகடாயநனும் சொன்னான்.

– முக்தன் ஒருவனுக்கு உலகைப் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் போன்ற பணிகள் இல்லை; என்றாலும் தந்தை ஒருவன் விவசாயம் செய்வதன் மூலம் கிட்டிய பலனை ஏதும் செய்யாமல் இருக்கின்ற அவனது புத்திரர்கள் சேர்ந்து அனுபவிப்பது போன்று, ஈச்வரன் மட்டுமே மேலே கூறப்பட்ட செயல்களைச் செய்கின்றபோதிலும், அதிலிருந்து கிட்டுகின்ற ஆனந்தம் என்பதை ஈச்வரனும் முக்தனும் சேர்ந்தே அனுபவிக்கின்றனர். ப்ரஹ்மஸூத்ரத்தில் (4-4-17) - ஜகத்வ்யாபார வர்ஜம் – ஜீவனுக்கு உலகைக் குறித்த பணிகள் இல்லை – என்று தொடங்கி, (4-4-21) - போகமாத்ர ஸாம்ய லிங்காச்ச – ப்ரஹ்மத்திற்கும் முக்தனுக்கும் அனுபவங்களில் ஒற்றுமை உள்ளது – என்று முடிக்கப்பட்டது காண்க. சாகடாயநத்தில் - ஸாமரஸ்யம் ஹி ஸாயுஜ்யம் வதந்தி ப்ரஹ்மவதிந: - ப்ரஹ்மத்தை உபாஸிப்பவர்கள், ஸர்வேச்வரனுக்கு ஒத்த இன்பத்தை அடைதலே ஸாயுஜ்யம் என்று கூறுவர் – என்றதும் காண்க.