Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்

ஆசாரக்குறைவினால் முக்தனுக்கு ஆனந்தம் குறையும் என்பதன் உட்பொருள்

மூலம்– ஆசார கைவல்யமுடைய முமுக்ஷுக்களுக்கு ஆனந்தஹாஸமுண்டாமென்று சிலர் சொல்லும் வசநம் ஆப்தமானாலும் முக்தனாவதற்கு முன்னே வரும் பகவத் அநுபவத்தில் ஸங்கோசத்தைச் சொல்லிற்றாமித்தனை. பிற்பட முக்தரானார்க்கும் நாளிழவே போக்கிப் பொருளிழவில்லை.

– ஆசாரத்தில் குறைபாட்டுடன் விளங்கும் முக்தர்களுக்கு உண்டாகும் ஆனந்தம் என்பதில் சுருக்கம் உண்டு என்று சிலர் கூறுவதுண்டு. இவர்களின் கருத்து நம்பத் தகுந்தது என்றாலும், அவர்கள் கூறுவதன் உட்கருத்து என்னவென்றால் – முக்தி அடைவதற்கு முன்பாக உண்டாகும் பகவத் அனுபவம் என்பது சுருக்கத்துடன் கூடியதாக இருக்கும் என்பதே ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு முக்தி விரைவாகக் கிட்டினாலும், தாமதமாகக் கிட்டினாலும், அதன் பின்னர் உண்டாகும் இன்பத்திற்குக் குறைவில்லை.