Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 6)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
கைங்கர்யங்களே செயல்களாக இருத்தல்
மூலம் – முன்பு சொன்ன கைங்கர்யம் இப்படிப் பரிபூர்ணார்நுபவத்தாலே பிறந்த ப்ரீதிவிசேஷத்துக்குப் பரீவாஹமென்னுமிடத்தை கத்யத்திலே பலகாலும் அருளிச் செய்தார். முக்ததசையில் ச்ருதிஸித்தமான ஜக்ஷணாதிகளும் ஜ்ஞாத்யாதி ஸம்பாதநங்களுமெல்லாம் புண்யபாபரூப கர்மநிரபேக்ஷ பகவதிச்சாநுகுண ஸ்வேச்சா மூலங்களாகையாலே கர்மபலமன்றிக்கே அநுபவ பரீவாஹமான கேவல கைங்கர்யத்திலே அந்தர்பூதங்கள். ஆகையால் ப்ராப்தியாயற்றது யதாபிமத கைங்கர்ய பர்யந்த பரிபூர்ண ப்ரஹ்மாநுபவமென்றதாயிற்று.
– மேலே கூறப்பட்ட கைங்கர்யம் என்பது பரிபூர்ணமான பகவத் அநுபவம் மூலமாக உண்டாகும் அளவு கடந்த ப்ரீதி காரணமாகத் தோன்றுகிறது என்பதை எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் பல இடங்களில் அருளிச் செய்தார். முக்தி பெற்ற நிலையில் உண்பது, தன்னுடைய பித்ருக்கள் போன்றவர்களைக் காண்பது உள்ளிட்ட செயல்கள் அந்த முக்தனுடைய புண்ணியபாவ கர்மங்களின் பலனால் அல்ல; அவை எம்பெருமானுடைய ஸங்கல்பத்திற்கு உட்பட்டு அந்த முக்தனின் விருப்பம் காரணமாகவே உண்டாகிறது. ஆகவே அவை கர்மபலன்கள் அல்ல, பகவத் அநுபவத்தின் காரணமாக வெளிப்படும் கைங்கர்யங்கள் என்றே ஆகின்றன. ஆக இறுதியான பலன் என்பது பரிபூர்ண பகவத் அநுபவம் மற்றும் முக்தன் விரும்பியபடி அந்த ப்ரஹ்மத்திற்கான கைங்கர்யம் என்பதே ஆகிறது.